காஜல் அகர்வால் பர்த்டேவுக்கு பாலகிருஷ்ணா கொடுத்த செம கிஃப்ட்!.. என்னன்னு பாருங்க!..

 
nbk

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான காஜல் அகர்வால் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில், அவருக்கு ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். 

அந்த வரிசையில், நடிகர் நந்தமுரி பாலகிருஷ்ணா நடிப்பில் உருவாகி வரும் NBK111 திரைப்படக் குழு, காஜல் அகர்வாலுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கும் வகையில் சிறப்பு போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டர் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இயக்குநர் கோபிசந்த் மலினேனி இயக்கத்தில் உருவாகி வரும் இந்த ஆக்ஷன்-டிராமா திரைப்படத்தில், பாலகிருஷ்ணாவுடன் காஜல் அகர்வால் முக்கிய பெண் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இதற்கு முன்பு இருவரும் இணைந்து நடித்த பகவந்த் கேசரி திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றிருந்தது.  தற்போது மீண்டும் இந்த கூட்டணி இணைந்திருப்பது ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

nbk111

NBK111 திரைப்படம் 1993-ஆம் ஆண்டு பம்பாய் மாஃபியா பின்னணியை மையமாகக் கொண்டு உருவாகி வருகிறது. இதில் பாலகிருஷ்ணாவுக்கு இதுவரை இல்லாத புதிய, ஸ்டைலான தோற்றம் வழங்கப்பட்டுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. மேலும், நடிகர் மனோஜ் மஞ்சு வில்லனாக நடித்து வருகிறார். இசையமைப்பாளராக எஸ். தமன் பணியாற்றி வருகிறார்.

இதற்கிடையில், காஜல் அகர்வாலின் மற்றொரு முக்கியமான படைப்பாக தி இந்தியா ஸ்டோரி திரைப்படம் உருவாகி வருகிறது. பொதுச் சுகாதார அச்சுறுத்தல்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் போராடும் துணிச்சலான வழக்கறிஞராக காஜல் அகர்வால் நடித்துள்ளார். ‘தி இந்தியா ஸ்டோரி’ திரைப்படம் 2026 ஜூலை 24ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என திட்டமிடப்பட்டுள்ளது.

பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகியுள்ள NBK111 படத்தின் காஜல் அகர்வால் சிறப்பு போஸ்டர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. மேலும், பல பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Tags

From Around the web