×

மீண்டும் ஒரு மாணவியின் உயிரைக் குடித்த நீட்….இதற்கு என்னதான் வழி!

நாளை நீட் தேர்வு நடக்கவுள்ள நிலையில் மதுரையைச் சேர்ந்த மாணவி ஒருவர் தற்கொலை செய்துகொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

நாளை நீட் தேர்வு நடக்கவுள்ள நிலையில் மதுரையைச் சேர்ந்த மாணவி ஒருவர் தற்கொலை செய்துகொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சில ஆண்டுகளுக்கு முன்னர் அறிமுகப்படுத்தப்பட்ட நீட் தேர்வுக்கு நாடு முழுவதும் எதிர்ப்பு எழுந்துள்ளது. தமிழகத்தில் அதற்கு கடுமையான எதிர்ப்பு எழுந்தாலும் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. நீட் தேர்வால் பாதிக்கப்பட்ட அனிதா தற்கொலை முதல் சமீபத்தில் அரியலூர் மாவட்டம் எலந்தகுழி கிராமத்தைச் சேர்ந்த மாணவர் விக்னேஷ் தற்கொலை வரை அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் நாளை நீட் தேர்வு நடக்க உள்ள நிலையில் மதுரையைச் சேர்ந்த துர்கா என்ற மாணவி தற்கொலை செய்து கொண்டுள்ளார். இவர் ஏற்கனவே நீட் தேர்வு எழுதி தோல்வி அடைந்துள்ளார். அதனால் இந்த ஆண்டு மிகுந்த பயத்துடனே படித்து வந்ததாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் நேற்று படித்துக் கொண்டிருந்த போது தனது அறையிலேயே தூக்கு மாட்டித் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News