×

சீரியலில் இருந்து திடீரென் விலகிய நீலிமா! இது தான் காரணமா!

அரண்மனை கிளி சீரியலில் அவர் துர்கா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். தற்போது அதில் இருந்து திடீரென வெளியேறியுள்ளதாக கூறியுள்ளார் நீலிமா.
 இது பற்றி அவர் இன்ஸ்டாகிராமில் உருக்கமாக பேசியுள்ளார். "கேமரா முன்பு இருக்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக இருப்பது நானாகத்தான் இருப்பேன். நான் குழந்தையில் இருந்தே நடித்து வருகிறேன். ஆனால் தற்போது என் வாழ்க்கையில் சில மாற்றங்கள் தேவைப்படுகிறது. அதை நான் மிகவும் ஆர்வத்துடன் எதிர்நோக்கியிருக்கிறேன்."

"துர்கா ரோலை மிஸ் செய்வேன். ரசிகர்கள் அல்லது நண்பர்கள்.. எதோ ஒன்று.. நீங்கள் தான் என்னுடைய பலம். என்னை வாழ்த்துங்கள்" என கூறியுள்ளார் நீலிமா.

நீலிமா இசை திடீரென சீரியலில் இருந்து வெளியேறியுள்ளது அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News