×

நான் செம குடிகாரி!.. நெட்டிசனின் கேள்விக்கு ஓப்பனா பதில் சொன்ன நீலிமா....

 
neelima

சீரியல் நடிகை, சினிமா நடிகை, தொகுப்பாளினி, தயாரிப்பாளர் என பல முகங்கள் கொண்டவர் நீலிமா. தற்போது சீரியல்களில் நடிப்பதை குறைத்துக்கொண்டு திரைப்படங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார். ஒருபக்கம் தனது இசை பிக்சர்ஸ் மூலம் ‘சகோ’ என்கிற மியூசிக் வீடியோவையும் தயாரித்துள்ளார்.

neelima

அவ்வப்போது ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் கூறி அதை யுடியூப்பில் வீடியோவாக வெளியிட்டு வருகிறார். அது என்னவோ, அவரிடம் பலரும் ஏடாகூடமான கேள்விகளை கேட்டு வருகின்றனர். ஆனாலும், அவர்களுக்கு கூலான பதில்களை கூறி வருகிறார். 

சமீபத்தில் ‘நீங்க சரக்கடிப்பீங்களா?’  என ஒருவர் கேட்டார். அதற்கு பதில் கூறிய ‘கண்டிப்பா.. நான் பயங்கர குடிகாரி.. நிறைய தண்ணீர் மற்றும் ஜுஸ் குடிப்பேன்.. மேலும், குடித்தாலும் அது என் தனிப்பட்ட விஷயம்.. அதை ஏன் பொதுவெளியில் பேசக்கூடாது.. சோசியல் டிரிங் என்பது வேறு..ஆனால், குடி குடியை கெடுத்துவிடும்’ என பதிலளித்துள்ளார்.

neelima

ஒரு ரசிகர் ‘சப்ப மூக்கி’ என கமெண்ட் செய்தார்., அதற்கு பதில் கூறிய நீலிமா ‘ எனக்கு சப்ப மூக்குதான். ஆனால், அதை வைத்து நான் இவ்வளவு தூரம் வந்துள்ளேன். அதற்கு என் இயக்குனர்களுக்கு நன்றி.. என் நடிப்பை பார்க்காமல் என் மூக்கை ஏன் பார்க்கிறீர்கள்?’ என கூலாக பதிலளித்துள்ளார்.
 

From around the web

Trending Videos

Tamilnadu News