மம்மியா இருந்தும் மயங்குறீங்களே... பிங்க் உடையில் ஃபீலிங்ஸை எகிறவைத்த நீலிமா இசை!

தொலைக்காட்சி சீரியல்களில் மிகவும் பிரபலமான நடிகை நீலிமா ராணி. சீரியலில் வில்லி ரோலில் வெளுத்து வாங்கும் இவர் சினிமாவில் பல குணசித்திர வேடங்கள் ஏற்று நடித்துள்ளார். இவர் கமல் ஹாசன் நடித்திருந்த தேவர் மகன் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.
பின்னர் இசைவாணன் என்பவரை திருமணம் செய்துக்கொண்டு "இசை" என்ற மகள் பெற்றெடுத்தார். தற்போது "கருப்பங்காட்டு வலசு " என்ற புதிய படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார். இப்படத்தில் கிராமத்தின் பழைய பழக்க வழக்கங்களையும், மூட நம்பிக்கைகளையும் மாற்றும் மாடர்ன் பெண்ணாக நடித்துள்ள நீலிமா ஒரு செண்டிமெண்ட்டிற்காக தனது ஒரிஜினல் பெயர் நீமாராணி என்பதை நீலிமா இசை என மாற்றிக்கொண்டார்.
இந்நிலையில் தற்ப்போது இன்ஸ்டாகிராமில் சமீபத்திய புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டுள்ளார். அழகிய பிங்க் சுடிதாரில் செம கியூட் போட்டோக்களை வெளியிட்டு இணையவாசிகள் ரசனைக்கு ஆளாகியுள்ளார். மம்மியாக இருந்தாலும் மயக்குறீங்களே மேடம்...