Categories: latest news television

இப்படியா கேப்ப? நீலிமாவிடம் ரசிகர் கேட்ட ஆபாசமான கேள்வி! எப்படி பதில் கொடுத்தார் தெரியுமா?

சின்னத்திரையில் முன்னனி  நடிகையாக இருந்தவர் நடிகை நீலிமா ராணி. ஒரு ஆங்கராகவும் மக்கள் மத்தியில் பரீட்சையமானவர். ஒரு சில படங்களில் துணை  நடிகையாகவும் நடித்தவர். குழந்தை நட்சத்திரத்தில் இருந்தே சினிமாவே பார்த்து வருகிறார் நீலிமா.

சமீபகாலமாக நீலிமாவை பற்றிய பல சர்ச்சைகள் இணையத்தில் உலா வருகின்றன. அவர் கணவர் குறித்தும் அவரின் தற்போதைய நிலைமை குறித்தும் காரசாரமான விவாதங்கள் எழுந்த வண்ணம் இருக்கின்றன. மிகக் குறுகிய காலத்திலேயே நீலிமா திருமணம் செய்து கொண்டார்.

neelima1

அவர் நடித்த நான் மகான் அல்ல படத்தின் சமயத்தில் அவருக்கு திருமணம் ஆகியிருந்தது. சின்னத்திரையில் வாணி ராணி சீரியலில் டிம்பிளாக வந்து கலக்கியிருப்பார் நீலிமா ராணி. அதன் பிறகு குழந்தை , குடும்பம், வீடு என தன் கவனத்தை திசை திருப்பினார் நீலிமா.

மிகவும் கஷ்டப்பட்டு தான் ஒவ்வொரு காலகட்டத்தையும் நீலிமா கடந்து வருகிறார் என்பதை அவரே நிறைய பேட்டிகளில் கூறியிருக்கிறார். வீட்டை விற்று, எல்லாவற்றையும் விற்று கட்டிய தாலியுடன் இருந்த காலங்கள் எல்லாம் அனுபவித்திருப்பதாகவும் கூறினார்.

சமீபத்தில் தான் நீலிமாவும் அவரது கணவரும் சேர்ந்து ஒரு புரடக்‌ஷன் கம்பெனியை ஆரம்பித்திருக்கிறார்கள். இந்த நிலையில் அவரை ஒரு தனியார் தொலைக்காட்சி பேட்டி காணும் போது அதில் ஒரு ரசிகர் தன் கமெண்டில் இரட்டை அர்த்தத்தோடு ஒரு கேள்வியை கேட்டிருந்தார்.

neelima2

அதாவது எனக்கும் சான்ஸ் கிடைக்குமா? என்று மட்டும் கேட்டிருந்தார். இதை கேட்டதும் நீலிமா மிகவும் கூலாக ‘அவர் நம்ம கம்பெனியில புரடக்‌ஷன்ல சான்ஸ் கேக்கிறார் போல, கண்டிப்பாக கிடைக்கும், என் இஸ்டாவில் மெயில் ஐடி இருக்கு, அதுக்கு உங்கள் தகவலை அனுப்புங்க, என் டீம் வந்து உங்களை ஃபாலோ பண்ணுவாங்க, நல்ல கதையா இருந்தாலும் சரி ஒன் லைன்னா இருந்தாலும் சரி ப்ளீஸ் வாங்கனு’ அதை அப்படியே பாஸிட்டிவாக மாற்றினார்.

மேலும் இந்த மாதிரி இரட்டை அர்த்தத்தோடு பேசுகிறவர்கள் கண்டிப்பாக டாக்டரை போய் பார்க்கனும் என்றும் சொல்லியிருந்தார்.

Rohini Sub Editor
நான் ரோகிணி. இந்த இணையதளத்தில் கடந்த 4 ஆண்டுகளாக செய்தி பிரிவில் சப் எடிட்டராக பணியாற்றுகிறேன். சினிமா தொடர்பாக அனைத்து செய்திகள் குறிப்பாக விமர்சனம், பழைய சினிமா தகவல்களை தருவதில் அதிக விருப்பம் உடையவர்.
Published by
Rohini