ஜெயிலர் 2 எடுக்கனும்னா இத பண்ணனும்... சன் பிக்சர்ஸுக்கே கண்டீசன் போட்ட நெல்சன்
வேட்டையன் திரைப்படத்தின் வெற்றி அடுத்ததாக ரஜினி நடிக்கும் கூலி திரைப்படத்தின் மீதும் பெரிய அளவு எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஜெயிலர், வேட்டையன் என அடுத்தடுத்து பிளாக்பஸ்டர் வெற்றிகளை கொடுத்த ரஜினியின் நடிப்பில் அடுத்ததாக கூலி திரைப்படம் தயாராகி வருகிறது.
லோகேஷ் கனகராஜ் இந்த படத்தை இயக்கி வருகிறார். இதுவும் மல்டி ஸ்டார் நடிக்கும் திரைப்படமாக தயாராகி வருகிறது. சத்யராஜ், நாகார்ஜுனா, ஸ்ருதிஹாசன் ,உபேந்திரா போன்ற பிற மொழிகளில் இருந்தும் நடிகர்கள் நடிக்கின்றனர். லோகேஷ் கனகராஜ் ரஜினி இவர்கள் காம்போவில் ஒரு ஆக்சன் திரைப்படம் பெரிய அளவில் உருவாகும் என ரசிகர்கள் அனைவரும் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
இந்த படத்திற்கு பிறகு ரஜினி ஜெயிலர் 2 திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார் .ஏற்கனவே அதனுடைய முதல் பாகம் நல்ல ஒரு ரெஸ்பான்ஸை பெற்றது .பெரிய அளவில் வசூலையும் வாரி இறைத்தது. அதன் தொடர்ச்சியாக ஜெயிலர் 2 திரைப்படத்தை உருவாக்கும் முயற்சியில் தயாரிப்பு நிறுவனம் ஈடுபட்டு இருந்தது.
இதற்காக ஸ்கிரிப்ட் வேலைகளில் நெல்சன் இறங்கி இருப்பதாகவும் தகவல் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் ஜெயிலர் 2 திரைப்படத்தை அடுத்த வருடம் தீபாவளிக்கு ரிலீஸ் செய்து விடலாம் என்ற எண்ணத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் நினைத்திருந்தது. ஆனால் நெல்சன் ஜெயிலர்2 படத்தை முடிக்க 13 மாதங்கள் வேண்டும் என்ற ஒரு கண்டிஷனை போட்டு இருக்கிறாராம்.
ஏனெனில் படத்தை பெரிய வெற்றி படமாக மாற்ற வேண்டும். அதே வேளையில் ரஜினியை பொறுத்த வரைக்கும் இரண்டாம் பாகம் என்பதில் அவருக்கு உடன்பாடே கிடையாது .அதனால் இந்த படத்தை சிறந்த அளவில் கொண்டு போக வேண்டும் என்றால் கொஞ்சம் நாள்கள் வேண்டும் என்ற வகையில் 13 மாதங்கள் டைம் கேட்டதாக தெரிகின்றது.
இதற்கு சன் பிக்சர்ஸ் நிறுவனமும் ஒப்புக்கொண்டதாக சொல்லப்படுகிறது. அதனால் 2026 ஏப்ரல் மாதம் இந்த படம் வெளியாக வாய்ப்பிருப்பதாக கோடம்பாக்கத்தில் கூறி வருகின்றனர்.. மேலும் இனிமேல் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மட்டுமே படம் பண்ண போவதாகவும் நெல்சன் முடிவெடுத்து இருக்கிறாராம்.
ஏனெனில் சின்ன சின்ன கம்பெனிகளுடன் இணைந்து பணியாற்றும் போது ஏகப்பட்ட பிரச்சனைகளை சந்தித்ததனால் இனிமேல் பெரிய பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு படம் பண்ண போவதாக நெல்சன் அறிவித்திருக்கிறாராம்.