Rajinikanth: கதை சூப்பர் கண்ணா!.. நெல்சனுடன் மீண்டும் இணையும் ரஜினி?!... லோகேஷ் அவ்ளோதானா?!..
Jailer 2: நடிகர் ரஜினி தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் 2 படத்தில் நடித்து வருகிறார். ஏற்கனவே வெளியான ஜெயிலர் முதல் பாகம் 600 கோடி வரை வசூலை அள்ளியதால் தற்போது இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க, அனிருத் இசையமைத்து வருகிறார். மேலும், தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா இதில் கேமியோ வேடத்தில் நடிப்பதாக சொல்லப்படுகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்த கூலி படம் 500 கோடி வசூலை பெற்றாலும் படம் கலையான விமர்சனங்களை பெற்றது.
எனவே இது லோகேஷ் கனகராஜுக்கு சரிவை ஏற்படுத்தியுள்ளது. ஆனாலும் பல வருடங்களுக்குப் பின் ரஜினியும், கமலும் இணைந்து நடிக்கும் ஒரு புதிய படத்தை லோகேஷ் இயக்கப்போகிறார் என்கிற செய்தி சில நாட்களுக்கு முன்பு வெளியானது. ஆனால் இந்த படம் எப்போது தொடங்கும் என்கிற தகவல் வெளியாகவில்லை.
மேலும், விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி ‘நானும் கமலும் இணைந்து நடிப்பது உண்மைதான். ஆனால் இயக்குனர் இன்னும் முடிவாகவில்லை’ என சொல்லி அதிர வைத்தார். ‘அப்படி என்றால் லோகேஷ் கனகராஜ் இல்லையா/’ என்கிற கேள்வி ரசிகர்களின் மனதில் எழுந்தது. எனவே இதுபற்றிய குழப்பம் நீடித்து வருகிறது.
இந்நிலையில், ஜெயிலர் 2 படப்பிடிப்பின் போது நெல்சன் சொன்ன ஒரு கதை ரஜினிக்கு மிகவும் பிடித்து போய்விட்டதாம். உண்மையில் அந்த கதையை நெல்சன் ரஜினிக்காக சொல்லவில்லையாம். ‘இப்படி ஒரு கதை என் மனதில் இருக்கிறது’ என்று சொல்லி இருக்கிறார். கதையை கேட்டு ஆச்சர்யப்பட்ட ரஜினி ‘கதை சூப்பர் கண்ணா.. நாமலே சேர்ந்து பண்ணுவோம்’ என சொல்லி நெல்சனுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறார். அடுத்து ஜூனியர் என்டிஆர் வைத்து தெலுங்கில் ஒரு திரைப்படத்தை இயக்கவிருக்கிறார் நெல்சன். அந்த படத்திற்கு பின் அவர் இந்த கதையை ரஜினியை வைத்து இயக்குவாரா என்பது தெரியவில்லை
