கோலமாவு கோகிலா மற்றும் டாக்டர் பட இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் திரைப்படம் பீஸ்ட். சன் பிக்சர்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மாஸ்டர் படத்திற்கு பின் விஜய் நடிக்கும் படம் என்பதால் ரசிகர்களிடையே இப்படம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். மேலும், இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.
இந்நிலையில், இப்படம் பற்றிய சமீபத்தில் பேட்டியளித்த இயக்குனர் நெல்சன் ‘பீஸ்ட் திரைப்படம் இதுவரை நான் இயக்கிய படங்களில் இருந்து மாறுபட்டிருக்கும். அதேபோல், விஜய் இதுவரை நடித்த படங்களில் இருந்து இப்படம் வேறுபட்டு ரசிகர்களை நிச்சயம் கவரும்’ என தெரிவித்துள்ளார்.
நெல்சனின் பேட்டி விஜய் ரசிகர்களிடையே இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
OTT: ஓடிடியில்…
விமர்சகர்கள் வைத்த…
STR49: சின்ன…
கோட் படத்தில்…
KPY Bala:…