நேபாள நிலச்சரிவு பாதிப்பு.. சோகத்தில் ஆழ்ந்த சிம்பு!
நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் காரணமாக பல்வேறு பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதில் பலர் உயிரிழந்ததுடன், ஏராளமானோர் காணாமல் போயுள்ளதால் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், நேபாளத்தில் ஏற்பட்டுள்ள பேரழிவுக்கு பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில்,நடிகர் சிம்பு “நேபாளத்தில் வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள பேரழிவைப் பார்ப்பது மிகவும் மன வேதனையாக உள்ளது. தங்களது அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுக்காகவும், இதில் பாதிக்கப்பட்ட அனைவருக்காகவும் எனது பிரார்த்தனைகள். இன்னும் மீட்புக்காக காத்திருப்பவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட வேண்டும். அனைவருக்கும் வலிமையும் பாதுகாப்பும் கிடைக்க பிரார்த்திக்கிறேன்” என அவர் தனது சமூக வலைதளப் பதிவில் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், நேபாள மக்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ள இந்தியாவும் தேவையான உதவிகளை வழங்க தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளது. இதனிடையே, வெள்ளப் பாதிப்பால் துயரத்தில் இருக்கும் மக்களுக்காக பிரார்த்திப்பதாக நடிகர் சிம்பு வெளியிட்டுள்ள இந்த உருக்கமான பதிவு, சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது.
வெற்றிமாறன் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவாகி வரும் அரசன் படத்திற்காக சிம்பு தீவிரமாக உழைத்து வருகிறார். இதுவரை 3 ஷெட்யூல்கள் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த ஆண்டு தீபாவளிக்கு அரசன் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
