">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
அலியா பட் படம் செய்த மலைக்க வைக்கும் சாதனை… என்ன தெரியுமா?
சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் அலியா பட் நடிக்கும் கங்குபாய் கதியாவாடி படத்தை ஒரு மிகப்பெரும் தொகை கொடுத்து நெட்ஃபிளிக்ஸ் வாங்கியிருக்கிறது.
மும்பையின் காமத்திபுரா பகுதியில் விபசாரக் கும்பலிடம் விற்கப்பட்ட ஒரு பெண், அந்த கும்பலையே கட்டுப்படுத்தும் பெண் தாதாவாக எப்படி உருவெடுக்கிறார் என்பதை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படத்தின் திரைக்கதை எழுதப்பட்டிருக்கிறது. பாலிவுட்டின் முன்னணி இயக்குனரான சஞ்சய் லீலா பன்சாலி இந்தப் படத்தை இயக்குவதோடு, தயாரிக்கவும் செய்திருக்கிறார். படத்தின் ஷூட்டிங் கடந்த நவம்பரில் முடிந்த நிலையில், போஸ்ட் புரடக்ஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.
படத்தில் அலியா பட தவிர, ஹூமா குரேஷி, அஜய் தேவ்கான், இம்ரான் ஹாஷிமி போன்றோர் முக்கியமான கேமியோ ரோலில் நடிக்கிறார்கள். 2021-ல் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக இருக்கும் இந்தப் படத்தின் ஸ்ட்ரீமிங் உரிமையை நெட்ஃப்ளிக்ஸ் தளம் 100 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. முன்னணி நடிகர்கள் படத்தை விட அலியா பட் படம் அதிக விலை கொடுத்து ஸ்ட்ரீமிங் ரைட்ஸை வாங்கியிருக்கிறார்கள். 150 கோடி முதலீட்டில் தயாரிக்கப்பட்ட இந்தப் படம் தியேட்டர், சாட்டிலைட் உரிமை என பெரும்தொகையைத் தயாரிப்புத் தரப்புக்கு இப்போதே சம்பாதித்துக் கொடுத்துவிட்டதாம்.