Categories: Cinema News latest news

கோட் படத்துக்கு வேட்டு வச்ச அஜித்!.. டீலில் விட்ட நெட்பிளிக்ஸ்!.. ஐயோ பாவம்!…

Goat Movie: விஜய் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் தயாராகி வரும் திரைப்படம் கோட். இந்த படத்தின் படப்பிடிப்பு கடைசி கட்டத்தில் இருக்கின்றது. படத்தின் இரண்டு சிங்கிள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் ஓரளவு வரவேற்பை பெற்று வருகிறது. படம் செப்டம்பர் மாதம் ரிலீஸ் என அறிவித்துள்ளது.

இந்த நிலையில் படத்தைப் பற்றிய இன்னும் சில அப்டேட்டுகளுக்காக ரசிகர்கள் ஆர்வமுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள். படத்திற்கு இசை யுவன் சங்கர் ராஜா. படத்தில் விஜயுடன் இணைந்து சினேகா, மீனாட்சி சௌத்ரி, பிரசாந்த், பிரபுதேவா உட்பட பல முக்கிய நடிகர்களும் நடித்துள்ளார்கள்.

இதையும் படிங்க: நாளைக்கு ரிலீஸ்.. ரீல காணோம் கதையா இருக்கு ‘கல்கி’ படத்தோட நிலைமை! என்ன மேட்டர் தெரியுமா?

இதற்கிடையில் கோட் படத்தின் டிஜிட்டல் உரிமையை நெட் பிலிக்ஸ் வாங்கி இருப்பதாக ஒரு தகவல் வெளியானது. ஆனால் உண்மையான நிலவரம் என்னவென்றால் படத்தின் டிஜிட்டல் உரிமை இன்னும் விற்கப்படவில்லையாம். ஆனால் வாய்வழியாக ஒரு நம்பிக்கையை மட்டும் நெட்ஃபிளிக்ஸ் கொடுத்திருக்கிறதாம்.

ஏனெனில் முழு படத்தையும் பார்த்த பிறகு தான் என்ன தொகைக்கு வாங்கலாம் என்ற ஒரு ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று சொல்லப்படுகிறது. அதுவரை தங்களுடைய லோகோவை உங்கள் விளம்பரத்தில் பயன்படுத்திக் கொள்ளலாம். நாங்கள் தான் வாங்குகிறோம் எனக் கூறிக் கொள்ளலாம் என்ற ஒரு சலுகையை நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் கோட் படத்திற்கு கொடுத்திருக்கிறதாம்.

இதையும் படிங்க: தசாவதாரத்தையும் தூக்கிச் சாப்பிட்டு விடுமா இந்தியன் 2? ரஜினிக்கு உள்குத்தா?

இதற்குப் பின்னணியில் இருக்கும் காரணம் என்னவென்றால் விடாமுயற்சி படம் கையெழுத்தானதுமே இந்த நிறுவனம் 75 கோடி தொகைக்கு அந்த படத்தை வாங்கி இருந்தது. அதனால் இப்போது அந்த நிறுவனத்துக்கு பெரிய அடியாம். ஏனெனில் விடாமுயற்சி படத்தின் நிலைமை என்ன என்பது  தெரியும். கிட்டத்தட்ட ஒன்றரை வருடம் ஆகியும் அந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் முடிக்கப்படாமல் இப்பொழுதுதான் மீண்டும் சூடு பிடித்திருக்கிறது. அதனால் இனிமேல் முழு படத்தையும் பார்த்துவிட்டுதான் சம்பந்தப்பட்ட படங்களை வாங்குவோம் என அந்த நிறுவனம் கூறியுள்ளதாக தெரிகிறது.

Rohini Sub Editor
நான் ரோகிணி. இந்த இணையதளத்தில் கடந்த 4 ஆண்டுகளாக செய்தி பிரிவில் சப் எடிட்டராக பணியாற்றுகிறேன். சினிமா தொடர்பாக அனைத்து செய்திகள் குறிப்பாக விமர்சனம், பழைய சினிமா தகவல்களை தருவதில் அதிக விருப்பம் உடையவர்.
Published by
Rohini