கென் கருணாஸுக்கு செம ஆஃபர் கொடுத்த நெட்பிளிக்ஸ்!.. செம ஹேப்பியாம்!...
காமெடி மற்றும் குணச்சித்திர நடிகர் கருணாஸின் மகன் கென். அசுரன், வாத்தி உள்ளிட்ட சில படங்கலில் நடித்திருக்கிறார். தனுஷ் மற்றும் வெற்றி மாறன் ஆகிய இருவரிடமும் உதவி இயக்குனராக வேலை பார்த்தார். திடீரென இயக்குனராக அறிமுகமானார். அவரே கதை எழுதி, அவரே இயக்கி நடித்து உருவான திரைப்படம் தான் யூத். வெறும் 5 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த திரைப்படம் தயாரிப்பாளருக்கு அதிக லாபத்தை கொடுத்தது. அதேபோல் இந்த படத்தை வாங்கி வெளியிட்ட ஓடிடி நிறுவனமான நெட்பிளிக்ஸ்க்கும் நல்ல லாபம் கிடைத்தது.
இந்நிலையில், சமீபத்தில் கென் கருணாஸை மும்பையில் உள்ள தங்களின் தலைமை அலுவலகத்திற்கு வரவழைத்த நெட்பிளிக்ஸ் நிறுவனம் அங்கு அவருக்கு சிறப்பான வரவேற்பை கொடுத்திருக்கிறது. அதோடு முழு அலுவலகத்தையும் சுற்றி காட்டி அங்குள்ள ஊழியர்களிடம் கென்னை அறிமுகம் செய்து வைத்திருக்கிறார்கள்.
மேலும், உங்களின் படங்களில் நாங்களும் பணியாற்ற விரும்புகிறோம். இருவரும் இணைந்து படங்களை உருவாக்குவோம்.. நீங்கள் தயாரிப்பதாக இருந்தால் நாங்களும் இணைந்து தயாரிக்கிறோம் அல்லது நாங்கள் பைனான்ஸ் செய்கிறோம் எனவும் பெரிய ஆஃபரை கொடுத்துள்ளனராம். இது கென்னுக்கு மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறதாம்.
