×

அதை அப்படியே ஓரமா வைங்க... பாகுபலி விஷயத்தில் நெட்பிளிக்ஸ் போட்ட ஒரே போடு!

பாகுபலி படத்தின் பிரீக்வல் விவகாரத்தில் நெட்பிளிக்ஸ் சுமார் 300 கோடி ரூபாய் செலவழித்து பிரமாண்டமாக எடுக்கத் தயாராகி வருகிறது. 
 
அதை அப்படியே ஓரமா வைங்க... பாகுபலி விஷயத்தில் நெட்பிளிக்ஸ் போட்ட ஒரே போடு!

பிரபாஸ், ராணா டகுபதி, அனுஷ்கா, தமன்னா, நாசர், சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன் என பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்த பாகுபலி படம் இரண்டு பாகங்களாக வெளியாகி மாஸ் ஹிட்டடித்தது. எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கியிருந்த பாகுபலியின் இரண்டு பாகங்களுமே இந்திய சினிமாவில் புதிய பாய்ச்சலை ஏற்படுத்தியிருந்தது. 


இந்தநிலையில், பாகுபலி படங்களின் ப்ரீக்வலாக `Bahubali: Before The Beginning’ படத்தை நெட்பிளிக்ஸோடு சேர்ந்து ராஜமௌலி தயாரித்திருக்கிறார். 100 கோடி செலவில் தயாரிக்கப்பட்ட இந்தப் படத்தில் ராஜமாதா சிவகாமி மகிழ்மதியில் எப்படி ஆட்சியமைத்தார் என்பதைச் சொல்ல இருக்கிறார்கள். ஷூட்டிங் எல்லாம் முடிந்த நிலையில், படத்தைப் பார்த்த நெட்பிளிக்ஸ் குழுவுக்குத் திருப்தி இல்லையாம். இதனால், எடுத்த படத்தை அப்படியே ஓரமாக வைத்துவிட்டு புதிய நடிகர், நடிகைகளோடு 200 கோடி ரூபாய் செலவில் மிகவும் பிரமாண்டமாக மீண்டும் ஷூட் செய்ய நெட்பிளிக்ஸ் முடிவெடுத்திருக்கிறதாம். 


கேம் ஆஃப் த்ரோன்ஸ் தொடருக்கு சவால் விடுக்கும் வகையில் பாகுபலியின் ப்ரீக்வல் தயாராகும் என்கிறார்கள். உலகின் பணக்கார ஓடிடி தளமான நெட்பிளிக்ஸ் இந்த புராஜக்டுக்கு மட்டும் ரூ.300 கோடியை ஒதுக்கியிருக்கிறது. இளம் வயது சிவகாமியாக மிர்ணால் தாக்கூர் நடித்திருந்த நிலையில், அவரும் மாற்றப்படலாம் என்கிறார்கள். 

From around the web

Trending Videos

Tamilnadu News