×

அவதூறு...அருவறுப்பு...ஆபாசம்... மேதகு பட இயக்குனர் இப்படிப் பட்டவரா?....

 
methagu

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபகாரனின் வாழ்க்கை ‘மேதகு’ என்கிற பெயரில் திரைப்படமாக உருவாகி சமீபத்தில் ஓடிடியில் வெளியாகி வரவேற்பை பெற்றது.  டி. கிட்டு என்பவர் இயக்கியுள்ள இந்த திரைப்படம்  இலங்கை புலிகளை ஆதரிப்பவர்களிடம் பெரும் வரவேற்பு பெற்றது. பிரபாகரன் பற்றி பல திரைப்படங்கள் வெளிவந்திருந்தாலும், இந்த படம் சிறப்பாக உள்ளதாக திரை விமர்சகர்கள் பாராட்டி வருகின்றனர்.  சமூக வலைத்தளங்களிலும் பலரும் இப்படத்தை பாராட்டினர்.

methagu

இந்நிலையில், இப்படத்தின் இயக்குனர் கிட்டு தனது முகநூல் பக்கத்தில் சினிமா பிரபலங்கள், அரசியல்வாதிகள் என அனைவரையும் மிகவும் அருவருப்பாகவும், அவதூறாகவும் விமர்சித்து வந்தது தெரியவந்துள்ளது. இதில், அதிர்ச்சி என்னவெனில் விடுதலை புலிகளை ஆதரித்தவர்களையும் அவர் மோசமாக விமர்சித்து வந்துள்ளது தெரியவந்துள்ளது. சீமான், தொல் திருமாளவன் மற்றும் பெரியாரையும் கடுமையாக கிண்டல்டித்து வந்துள்ளார். குறிப்பாக திமுகவை மிகவும் கடுமையாக விமர்சித்து வந்துள்ளார்.

methagu

அவரது முகநூலை நெட்டிசன்கள் நோண்டி அவர் கூறிய கருத்துக்கள் மற்றும் மீம்ஸ்களை டிவிட்டரில் பகிர்ந்து வருகின்றனர். இதையடுத்து தற்போது அவர் தனது முகநூல் பக்கத்தை லாக் செய்துவிட்டார்.  

இதையடுத்து நெட்டிசன்கள் பலரும் அவரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

meem

From around the web

Trending Videos

Tamilnadu News