×

தீபாவளி தேவைதானா? - திமுக ஆதரவாளர் சுப.வீரபாண்டியன் வீடியோவால் சர்ச்சை..

தீபாவளி தேவையா என திமுக ஆதரவாளர்  சுப.வீரபாண்டியன் வெளியிட்ட வீடியோ சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
 
தீபாவளி தேவைதானா? - திமுக ஆதரவாளர் சுப.வீரபாண்டியன் வீடியோவால் சர்ச்சை..

தமிழகம் முழுவதும் நவ. 14ம் தேதியான நேற்று தீபாவளி பண்டிகை விமர்சையாக கொண்டாடப்பட்டது. ஆனால், தீபாவளி என்பது தமிழகர்களின் பண்டிகையே அல்ல என்கிற கருத்தை திமுக தொடர்ந்து முன் வைத்து வருகிறது. அதனால்தான் திமுக தலைவர் ஸ்டாலின் கூட மக்களுக்கு தீபாவளி வாழ்த்து கூறவில்லை. 

இந்நிலையில், மக்களின் நம்பிக்கையை குலைக்கும் வகையில் திமுக ஆதரவாளர் சுப.வீரபாண்டியன் தன்னுடைய யுடியூப் பக்கத்தில் ‘தீபாவளி சித்தாந்தமும் கொண்டாட்டமும்’ என்கிற தலைப்பில் ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார்.

அதில், தீபாவளி பண்டிகை தமிழர்களின் பண்டிகை அல்ல. இது சமணர்கள் கொண்டாட வேண்டிய பண்டிகை. அதை இந்துக்கள் பண்டிகையாக மாற்றிக்கொண்டனர். இது சமணர்களின் ஸ்ரீபுராணம் நூலிலேயே குறிபிடப்பட்டுள்ளது. கார்த்திகை மாதம் அதாவது பனிக்காலம் துவங்குவதை கொண்டாடும் விதமாகவே தீபாவளி கொண்டாடப்படுகிறது என அவர் அந்த வீடியோவில் அவர் கூறியுள்ளார். அதேநேரம், பெருவாரியான இந்து மக்கள் நம்பும் ‘நரகாசுரைன் கொல்லப்பட்ட நாளே தீபாவளி’ என்பதற்கான குறிப்பு எந்த நூலிலும் இல்லை என அவர் கூறியிருந்தார். அதோடு, சமண மற்றும் பௌத்த மதங்களின் தாக்கம் இந்து மதத்தில் அதிகரித்துள்ளது எனவும் அவர் பேசியிருந்தார். 

அவரின் இந்த கருத்து இந்துக்களின் நம்பிக்கையை புண்படுத்துவதாக அமைந்துள்ளது என சமூகவலைத்தளங்களில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். டிவிட்டரில் பிரபல டாக்டர் சுமந்த ராமனும் இந்த வீடியோவை பகிர்ந்து ‘இவரின் கருத்தை திமுக ஏற்றுகொள்கிறதா?.. மக்களின் நம்பிக்கையை ஏன் இவர் புண்படுத்த வேண்டும்?’ என கேள்வி எழுப்பியுள்ளார்.

தீபாவளி திருநாளில் சுப.வீரபாண்டியனின் இந்த வீடியோ வெளியிட்டிருப்பது சமூகவலைத்தளங்களில் கண்டனத்திற்கு உள்ளாகியுள்ளது.


 

From around the web

Trending Videos

Tamilnadu News