×

தம்பி நீ நல்லா வருவப்ப!.. தனுஷ் ரேஞ்சுக்கு பிரபலமான கர்ணன் பட நடிகர்.....

 
தம்பி நீ நல்லா வருவப்ப!.. தனுஷ் ரேஞ்சுக்கு பிரபலமான கர்ணன் பட நடிகர்.....

பரியேறும் பெருமாள் திரைப்படம் மூலம் கவனம் ஈர்த்தவர் மாரி செல்வராஜ். தனுஷை வைத்து அவர் இயக்கிய‘கர்ணன்’ திரைப்படம் சமீபத்தில் வெளியானது. இப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று நேர்மறையான விமர்சனத்தை பெற்றுள்ளது. இப்படத்தின் பாடல்கள் ஏற்கனவே வரவேற்பை பெற்றிருந்த நிலையில் ரசிகர்களிடையே இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. தற்போது அந்த எதிர்பார்ப்பை கர்ணன் பூர்த்தி செய்துள்ளது. அசுரனை அடுத்து தனுஷுக்கு இப்படம் அடுத்த பிளாக் பஸ்டர் ஹிட் எனவும் அவர்கள் கூறி வருகின்றனர். இப்படத்தை ரசிகர்கள் மட்டுமின்றி விமர்சகர்கள், திரை பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள் என பலரும் பாராட்டி வருகின்றனர்.

இப்படத்தில் நடித்த தனுஷ் மட்டுமின்றி நடிகர் லால், காவல்துறை அதிகாரியாக நடித்த நடராஜ் என பலரின் கதாபாத்திரங்களும் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளதாக நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.

இதில், கர்ணன் படத்தில் நடித்த ஒரு சிறுவன் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். அவரின் புகைப்படத்தை பகிர்ந்து ‘தம்பி நீ நல்லா வருவப்பா’ என பாராட்டி வருகின்றனர்.


 


 

From around the web

Trending Videos

Tamilnadu News