Categories: Cinema News latest news

Kanguva: இதையாடா இவ்வளவு நாள் ஒட்டிக்கிட்டு இருந்தீங்க!.. கங்குவாவை மீம்ஸ் போட்டு கலாய்க்கும் ஃபேன்ஸ்…

கங்குவா திரைப்படத்தை நெட்டிசன்கள் சமூக வலைதள பக்கங்களில் மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகிறார்கள்.

நடிகர் சூர்யா நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று வெளியான திரைப்படம் கங்குவா. சிறுத்தை சிவா இயக்கத்தில் ஞானவேல் ராஜா தயாரிப்பில் உருவாகியிருந்த இந்த திரைப்படத்தில் சூர்யா இரட்டை கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். இப்படத்தை முழுக்க முழுக்க பீரியட் படமாக சிறுத்தை சிவா இயக்கியிருந்தார்.

இதையும் படிங்க: Kanguva: கங்குவா படத்துக்காக சுடப்பட்ட மொத்த வடைகள்!.. இப்படி போட்டு பொளக்குறாரே மாறன்

மேலும் சூர்யாவுடன் இணைந்து இப்படத்தில் திஷா பதானி, பாபி தியோல், நட்டி நட்ராஜ், கருணாஸ், போஸ் வெங்கட் உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் நடித்திருக்கிறார்கள். தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் பான் இந்தியா திரைப்படமாக இன்று வெளியானது.

சூர்யா நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் எதற்கும் துணிந்தவன். இந்த திரைப்படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியை கொடுக்கவில்லை. இதனால் அடுத்த படத்தின் மீது மிகுந்த நம்பிக்கை வைத்து இரண்டு வருடங்கள் கங்குவா படத்திற்காக மட்டுமே முழு உழைப்பையும் போட்டு நடித்திருந்தார் சூர்யா.

சூர்யாவின் அடுத்த திரைப்படத்தை சிறுத்தை சிவா தான் இயங்கப் போகின்றார் என்று கூறிய உடனே ரசிகர்கள் வயிற்றில் புலியை கரைக்க தான் செய்தது. ஏற்கனவே ரஜினியை வைத்து அவர் இயக்கிய அண்ணாத்த திரைப்படம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்த நிலையில் இந்த படத்தை நல்ல படமாக அவர் எடுத்து விடுவாரா? என்ற குழப்பம் இருந்தது. ஆனால் படத்திற்கு முன்னதாக படக்குழுவினர் கொடுத்த ப்ரமோஷன்கள் ரசிகர்கள் மத்தியில் ஏகப்பட்ட எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.

படம் கண்டிப்பாக 2000 கோடியை வசூலிக்கும் என்று ஞானவேல் ராஜா ஓவர்ஹைப் ஏற்றிக் கொண்டே இருந்தார். அது மட்டுமா நடிகர் சூர்யா தான் ப்ரோமோசனுக்கு செல்லும் இடங்களில் எல்லாம் படம் குறித்து ஓவர் பில்டப் கொடுத்தார். கங்குவா படத்தை ரசிகர்கள் வாயை பிளந்து கொண்டு பார்ப்பார்கள். இந்திய சினிமாவே இப்படி ஒரு படத்தை எப்படி எடுத்தீர்கள் என்று ஆச்சரியப்படும், ஆஹா ஓஹோ என்று தொடர்ந்து புகழாரம் தான்.

இப்படி இருக்க இன்று 11,000 திரையரங்குகளில் படம் வெளியானது. சிறுத்தை சிவா, சூர்யா, ஞானவேல் ராஜா ஆகியோர் கொடுத்த உச்சகட்ட ஹைப்போடு படம் பார்க்க வந்த ரசிகர்களுக்கு ஏமாற்றம் மட்டும் தான் மிச்சம். படம் வெளியானது முதலே பாசிட்டிவ் விமர்சனங்களை தாண்டி நெகட்டிவ் விமர்சனங்களே அதிக அளவில் வந்து கொண்டிருக்கின்றது. இதனால் படத்தின் வசூலிலும் கட்டாயம் அடி வாங்கும் என்றுதான் கூறப்படுகின்றது.

இந்த படம் 2000 கோடி இல்லை 100 கோடி ரூபாய் வசூல் செய்தாலே ஆச்சரியம் என்று ரசிகர்கள் கூறி வருகிறார்கள். இது ஒரு புறம் இருக்க நெட்டிசன்கள் சமூக வலைதள பக்கங்களில் தங்களது பங்குக்கு முடிந்த அளவுக்கு கங்குவா திரைப்படத்தை மீம்ஸ் போட்டு கிழித்து வருகிறார்கள். இந்த மீம்ஸ்கள் அனைத்தும் தற்போது சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வருகின்றது. எது எப்படியோ ஞானவேல் ராஜா, சூர்யா இருவரும் தன் வாயை வைத்துக் கொண்டு சும்மா இல்லாமல் இப்படி பில்டப் மேல் பில்டப் கொடுத்து அடி வாங்கியது மட்டும்தான் மிச்சம்.

ramya suresh
Published by
ramya suresh