
Cinema News
சாட்டையை சுழற்றினா எம்ஜிஆரா?.. ஏணி வச்சா கூட எட்டாதே.. டிவிகே விஜயின் பரிதாபங்கள்..
தமிழ் சினிமாவின் உச்சம் தொட்ட நடிகர் விஜய். சினிமாவில் நம்பர் ஒன் இடத்தில் இருக்கும் போதே அரசியலில் களம் கண்டார். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இதுவரை தமிழ் சினிமா துறையில் ஆதிக்கம் செலுத்தியவர் தான் அரசியலிலும் ஆதிக்கம் செலுத்தி வந்துள்ளார்கள். குறிப்பாக அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா, கருணாநிதி போன்ற தலைவர்கள் சினிமாவில் தங்களின் பதிப்பை பதித்ததால் அவர்களால் அரசியலிலும் ஜொலிக்க முடிந்தது.
குறிப்பாக எம்ஜிஆருக்கு இன்றும் மக்கள் மத்தியில் தனி மரியாதை உள்ளது. அதற்கு காரணம் அவர் நடித்த படங்கள் அதில் சொன்ன கருத்துக்கள் மற்றும் தத்துவ பாடல்கள் இவை எல்லாம் அரசியலில் அவர் ஜொலிக்க உதவியது. எம்ஜிஆர் படங்களில் மட்டும் ஊர் போற்றும் தலைவனாக நடிக்கவில்லை. நிஜ வாழ்க்கையிலும் அவர் அப்படி வாழ்ந்து காட்டினார்.
அதேபோல இன்று தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் போது விஜய் அரசியலில் வந்துள்ளார். தற்பொழுது நடித்த முடித்துள்ள ஜனநாயகன் திரைப்படம்தான் தனது கடைசி படம் என்று குறிப்பிட்டுள்ளார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் நான் ஆணையிட்டால் என்ற வாசகத்துடன் சாட்டையை சுழற்றுவது போல் விஜய் தோன்றியிருப்பார். என்னதான் விஜய் எம்ஜிஆரை காப்பி அடித்தாலும் அரசியலில் ஒரு போதும் எம்ஜிஆர் ஆக முடியாது என்று நெட்டிசன்கள் சமூக வலைதளவில் தங்களின் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றன. அதில்

தன் சொந்த வாழ்க்கை, திரைப்பட வாழ்க்கை, அரசியல் வாழ்க்கை மூன்றும் எந்த காலத்திலும், எந்த காரணத்தினாலும் களங்கப்படாமல் வாழ்ந்த ஒரே மகானன் புரட்சி தலைவர் பொன்மன செம்மல் தான்.
“உடுக்கை இழந்தவர் கை போல்” அவர் செய்த உதவிகள் பல. சொல்லியோ எழுதியோ மாளாது. அவர் செய்த உதவிகளை பிற்காலத்தில் உதவி பெற்றவர்களோ, அதை அறிந்த மற்றவர்களோ சொல்லித்தான் தெரியுமே தவிர அவர் என்றும் விளம்பர படுத்தியது கிடைக்காது.
அவர் தன் சுய மரியாதை களங்கப்படாமல் ஆயுள் முழுவதும் கவனமாக இருந்தார். பணம் பதவி என்றும் அவர் குறிக்கோளாக இருந்ததில்லை. ஏழ்மை, வறுமை இவற்றை வாழ்க்கையில் அனுபவித்து பிற்காலத்தில் பெயரும் புகழும் பெற்றவர். அன்றும், இன்றும் என்றும் அந்த இடத்தை எவரும் நெருங்க கூட முடியாது.