Connect with us
biggboss

Bigg Boss

Biggboss Tamil 8: அவங்கள பத்தி தெரியுமா உங்களுக்கு?… கடுப்பில் ரசிகர்கள்!

Biggboss Tamil: பிக்பாஸ் வீட்டுக்குள் லேசாக கலகங்கள் எட்டிப்பார்க்க ஆரம்பித்து இருக்கின்றன. சாச்சனா, சவுந்தர்யா, சுனிதா என பெண் போட்டியாளர்கள் இதற்கு காரணமாக இருப்பதால் பிக்பாஸ் தற்போது மகிழ்ச்சியில் இருப்பார்.

இந்த வாரம் வீட்டின் கேப்டனாக இருக்கும் சத்யா கடந்து வந்த பாதை டாஸ்கில் தன்னுடைய சொந்த கதையை கூறி அனைவரின் அனுதாபத்தினையும் சம்பாதித்து இருக்கிறார். அவருக்காக ரசிகர்கள் உருகினாலும் சவுந்தர்யாவை அவர் திட்டியதை இன்னும் மறக்கவில்லை போல.

வீட்டில் நடக்கும் பிரச்சினைகளுக்கு விரைந்து தீர்வு காண வேண்டும் என சவுந்தர்யா நடுவீட்டில் அமர்ந்து தர்ணா செய்தார். இதற்கு கேப்டன் சத்யா ஓவராக அவரை பேசி விட்டார். (தனிமையில் தான்) படிக்காத பொண்ணு மாதிரி நடந்துக்குறா, கொஞ்சம் கூட அறிவே இல்ல என்ற ரீதியில் சத்யா பேசிவிட்டு பின்னர் அதற்காக மன்னிப்பும் கேட்டு விட்டார்.

ஆனால் குறும்படம் எதுவும் போடுவார்களோ? என்ற அச்சம் அவருக்குள் இருக்கிறது. போதாதற்கு ரசிகர்கள் வேறு சத்யாவை சமூக வலைதளங்களில் ரவுண்டு கட்டி அடிக்கின்றனர். அந்தவகையில் சவுந்தர்யா மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் படித்தவர் என்பதை தேடியெடுத்து கொண்டு வந்துள்ளனர்.

சத்யா படித்தது சத்யபாமா பல்கலைக்கழகத்தில். இரண்டு பேரும் படித்திருந்தாலும் சவுந்தர்யா படித்தது அரசு கல்லூரியில், சத்யா தனியார் கல்லூரி. மதிப்பெண்கள் அடிப்படையில் தான் அரசு கல்லூரியில் இடம் கிடைக்கும். தனியார் கல்லூரிக்கு பணம் இருந்தாலே போதும்.

இதை அடிப்படையாக வைத்து சவுந்தர்யா ஆர்மி சத்யாவை அட்டாக் செய்ய ஆரம்பித்து இருக்கின்றனர். இதனால் இந்த வாரம் குறும்படத்தினை விஜய் சேதுபதி கையில் எடுப்பாரா? என்ற ஆர்வம் எழுந்துள்ளது.

author avatar
சிவா
முதுகலை பட்டதாரியான இவர் 12 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல்,வணிகம் மற்றும் சமூகம் சார்ந்த கட்டுரைகளை வழங்கி வருகிறார். தற்போது கடந்த 12 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் செய்தி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Continue Reading

More in Bigg Boss

To Top