Categories: Cinema News latest news

ஒருவழியா தலைவர் பஞ்சாயத்து தலைவர் ஆயிட்டார்!- ரஜினியை கலாய்க்கும் நெட்டிசன்கள்…

நடிகர் ரஜினி அரசியலுக்கு வருவது போலவே காட்டிக்கொண்டு கடந்த 25 வருடங்களை ஓட்டினார். தான் நடிக்கும் படங்களில் நடப்பு அரசியல்வாதிகளை அவர் எச்சரிப்பது போலவும், கண்டிப்பது போலவும் வசனங்களை வைத்து அவரின் ரசிகர்களை குஷிப்படுத்தினார்.

ஒருவழியாக அரசியல் கட்சியை துவங்குவதாக அறிவித்தார். 2021 சட்டமன்ற தேர்தலில் என் கட்சி போட்டியிடும் என அறிவித்தார். அவரின் ரசிகர்கள் ஆர்ப்பரித்தனர். அரசியல் வேலைகள் வேகமாக நடந்தது. ஆனால், 2 வருடங்கள் ஆகியும் கட்சியின் பெயரை கூட அறிவிக்கவில்லை.

திடீரென தனது உடல்நிலையை காரணம் காட்டி அரசியல் கட்சி துவங்கப்போவதில்லை என அறிவித்தார். இது அவர் அரசியலுக்கு வருவார் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு கடும் ஏமாற்றத்தை கொடுத்தது. ஏனெனில், ரஜினி கட்சி துவங்கினால் அவர்தான் அடுத்த முதல்வர் என அவர்கள் நினைத்தனர்.

தற்போது அண்ணாத்த படத்தின் டிரெய்லர் வீடியோ வெளியாகியுள்ளது. இப்படத்தில் ரஜினி பஞ்சாயத்து தலைவராக நடித்துள்ளார். இதை கையில் எடுத்த நெட்டிசன்கள் ‘தலைவர் இப்பதான் ஊர் பஞ்சாயத்து தலைவர் ஆகியிருக்கார்.’. முதல்வர் ஆவார்னு பார்த்தா ஊர் தலைவர் ஆகிட்டார்’ என கிண்டலடித்து வருகின்றனர்.

இது தொடர்பாக வெளியான சில மீம்ஸ்கள் உங்கள் பார்வைக்கு…

சிவா
முதுகலை பட்டதாரியான இவர் 12 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல்,வணிகம் மற்றும் சமூகம் சார்ந்த கட்டுரைகளை வழங்கி வருகிறார். தற்போது கடந்த 12 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் செய்தி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Published by
சிவா