Vijay TVK: இன்னும் அடிக்கவே ஆரம்பிக்கல.. விஜயை அவருடைய பாணியிலேயே வச்சு செய்யும் நெட்டிசன்கள்
கரூர் சம்பவத்திற்கு முதன் முறையாக நேற்றுதான் மக்களை நேரில் சந்தித்தார் விஜய். காஞ்சிபுரத்தில் மக்கள் சந்திப்பு கூட்டம் ஒன்றை நடத்தி அங்கு பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார் விஜய். கரூர் சம்பவத்திற்கு பிறகு தன்னை பற்றி யாரெல்லாம் என்ன பேசினார்களோ அதற்கு திருப்பி கொடுக்கும் வகையில் அந்த கூட்டத்தை பயன்படுத்திக் கொண்டார் தவெக தலைவர்.
அவருக்கெதிராக மீம்ஸ்கள், கேலி கிண்டல்கள் என சோசியல் மீடியாக்களில் பரவி வந்தன. குறிப்பாக தவெக தலைவரின் பேச்சு சினிமா பாணியில்தான் இருந்து வருகிறது. நேற்று கூட அந்த மாதிரி பல விஷயங்களை பேசினார். தற்குறி மேட்டரை எடுத்த விஜய் அதற்கும் பதிலடி கொடுத்தார். என் மக்கள் மேல கை வச்சா என்னாகும்னு பார்க்க போறீங்க என்ற வகையிலும் மிரட்டுவது போல பேசியிருந்தார் விஜய்.
இன்னும் கூடுதலாக இன்னும் அடிக்கவே ஆரம்பிக்கல. அதுக்குள்ளவா என்றும் பேசியிருந்தார். அதனால் நேற்று விஜய் பேசிய எல்லா விஷயங்களையும் கருத்தில் வாங்கிக் கொண்ட நெட்டிசன்கள் விஜய்க்கு எதிராக மறுபடியும் மீம்ஸ்களை போட்டு கிண்டலடித்து வருகின்றனர். குறிப்பாக மொட்ட ராஜேந்திரன் புகைப்படத்தை பதிவிட்டு நீ என்னைக்கு இந்த சர்கார் மாடுலேஷனில் பேசுறத நிறுத்துறீயோ அன்னைக்குத்தான் மக்கள் உன்னை அரசியல்வாதியா பார்ப்பாங்க. அதுவரைக்கும் நீ ஜோக்கர்தான் என்று பதிவிட்டிருக்கின்றனர்.

அரசியலில் என்னைக்கு குதிச்சாரோ விஜய், அன்றிலிருந்தே அவரை பற்றி பல விமர்சனங்கள் கேளிக்கைகள் கிண்டல்கள் என தொடர்ந்து சோசியல் மீடியாக்களில் பரப்பி வருகின்றனர். ஆனால் நேற்று காஞ்சிபுரத்தில் அவருடைய பேச்சில் கோபம், ஆக்ரோஷம் அதிகமாகவே தெரிந்தது. நான் சொல்லமாட்டேன், சொன்னா செய்யாம விட மாட்டேன், என படங்களில் பேசும் வசனங்கள் மாதிரிதான் நேற்று காஞ்சிபுரத்தில் அவர் பேசியிருந்தார்.
அதனால் அவருடைய தொண்டர்களை தவிர மற்றவர்களுக்கு விஜய் பேசியது பெருசா எடுபடவில்லை. சினிமாக்காரர் இப்படித்தான் பேசுவார் என்பதை போல கடந்துவிட்டனர் என்றுதான் சொல்லவேண்டும். எதார்த்த வாழ்க்கைக்கு திரும்பி நான் இதெல்லாம் செய்வேன், இப்படித்தான் என் அரசியல் இருக்கும் என பேசினார் என்றால் அவருடைய தேர்தலுக்கு இன்னும் உதவிக்கரமாக இருக்கும் என்பதே பலரின் கருத்தாக இருக்கிறது.
