Categories: Cinema News latest news

இவ்ளோ நாள் கோமால இருந்தீங்களா?.. ஷங்கரை கலாய்க்கும் நெட்டிசன்கள்…

1993ம் ஆண்டு கடலூர் மாவட்டம் விருதாச்சலத்தை அடுத்துள்ள கம்மாபுராம் ஒன்றியத்தை முதனை என்கிற கிராமத்தில் வசித்து வந்த ராஜாக்கண்ணு என்கிற குறவர் இனத்தவரை போலீசார் ஒரு திருட்டு வழக்கில் கைது செய்து காவல்துறை லாக்-அப்பில் வைத்து தாக்கியதில் அவர் மரணமடைந்தார்.

இந்த வழக்கை எடுத்து நடத்தியவர்தான் வழக்கறிஞர் சந்துரு. 13 வருடங்கள் போராடி அவர் சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு தண்டனை வாங்கி கொடுத்தார். மேலும், ராஜாக்கண்ணு எந்த தவறும் செய்யவில்லை என்பதையும் அவர் நிரூபித்தார்.

இந்த சம்பவத்தைத்தான் சூர்யா ஜெய்பீம் திரைப்படமாக உருவாக்கினார். இப்படம் ரசிகர்களிடம் மட்டுமில்லாமல் திரைத்துறையினரிடமும் பாராட்டை பெற்றது. அதோடு பத்திரிக்கையாளர்கள், வழக்கறிஞர்கள், சமூக ஆர்வலர்கள் என பலரும் அப்படத்தை பாராடி கருத்து தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், இயக்குனர் ஷங்கர் இப்படத்தை சமீபத்தில்தான் பார்த்தார் போல!. தனது டிவிட்டர் பக்கத்தில் ‘ஜெய்பீம் திரைப்படம் குரலற்றவர்களுக்கான குரலாக இப்படம் ஒலிக்கிறது. இப்படத்தை இயக்குனர் எதார்த்தமாக அணுகியுள்ளது பாராட்டுக்குரியது. நடிப்பை தாண்டி சமூகத்தின் மீது சூர்யா காட்டும் கருணை பாராட்டத்தக்கது. சக்தி வாய்ந்த படங்கள் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வரும் என மீண்டும் நிரூபணமாகியுள்ளது’ என பாராட்டியிருந்தார்.

இதையடுத்து ‘படம் வெளியாகி இவ்வளவு நாட்கள் கழித்து இப்போதுதான் ஜெய்பீம் படத்தை பார்த்தீர்களா?.. இவ்வளவு நாட்கள் கோமாவில் இருந்தீர்களா?’ என நெட்டிசன்கள் அவரை கிண்டலடித்து வருகின்றனர்.

சிவா
முதுகலை பட்டதாரியான இவர் 12 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல்,வணிகம் மற்றும் சமூகம் சார்ந்த கட்டுரைகளை வழங்கி வருகிறார். தற்போது கடந்த 12 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் செய்தி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Published by
சிவா