Categories: Cinema News latest news

அண்ணாத்த படத்தை 5 தடவ பார்த்தவனுக்கு செயின் போடுங்க.. சிவாவை கலாய்க்கும் நெட்டிசன்கள்….

விஸ்வாசம், வீரம், வேதாளம் ஆகிய படங்களை இயக்கிய சிவா இயக்கத்தில் ரஜினி நடித்து தீபாவளியன்று வெளியான திரைப்படம் அண்ணாத்த. ஏற்கனவே அதிக நாட்கள் படப்பிடிப்பில் இருந்ததால் சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு பல கோடிகள் நஷ்டம்.

நவம்பர் 4 தேதி படம் வெளியாகி முதல் 4 நாட்கள் நல்ல வசூலை பெற்றாலும் 5ம் நாள் முதல் மழை துவங்கியதால் மக்கள் தியேட்டர் பக்கம் செல்லவில்லை. அதோடு, அதிக வசூலை குவிக்கும் சென்னையில் கனமழை என்பதால் தியேட்டர்களில் காட்சிகள் ரத்து செய்யப்பட்டது. எனவே, அண்ணாத்த பட வசூல் கடுமையாக பாதிக்கப்பட்டது. எனவே, மீண்டும் சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு ஒரு படத்தை நடித்து கொடுக்க வேண்டிய நிலைக்கு ரஜினி தள்ளப்பட்டுள்ளார்.

இந்நிலையில், இயக்குனர் சிவாவின் வீட்டுக்கு நேரில் சர்ப்பரைஸாக சென்ற ரஜினி அவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்ததோடு அவருக்கு தங்க செயின் அணிவித்து பாராட்டியதாக செய்திகள் வெளியானது.

இதையடுத்து, சிவா சார் அண்ணாத்த படத்தை 5 தடவைக்கு மேல பார்த்தவனுக்கு தங்க செயின் பரிசா கொடுத்து ஒரு போஸ்ட் போடுங்க என சிவாவை நெட்டிசன்கள் கலாய்க்க துவங்கி விட்டனர். இதற்கு பதிலளித்துள்ள இன்னொரு நெட்டிசன் ‘சிவா.. இத கன்சிடர் பண்ணுங்க. அண்ணாத்த படத்தை 5 தடவைக்கு மேல பார்த்தவன் உயிரோட இருக்குறது ரொம்ப பெரிய விஷயம்’ என கிண்டலடித்துள்ளார்.

ஏற்கன, ரஜினி சிவாவுக்கு செயின் போட்ட செய்தியை பகிர்ந்த நடிகர் பிரேம்ஜி ‘மை டியர் தலைவா சிம்பு, என் அண்னன் வெங்கட்பிரபு வீட்டின் முகவரியை அனுப்பவா?’ என கிண்டலாக பதிவிட்டுருந்தது குறிப்பிடத்தக்கது. அந்த டிவிட்டில் போயிதான் ரசிகர்கள் இயக்குனர் சிவாவை கலாய்த்து வருகின்றனர்.

சிவா
முதுகலை பட்டதாரியான இவர் 12 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல்,வணிகம் மற்றும் சமூகம் சார்ந்த கட்டுரைகளை வழங்கி வருகிறார். தற்போது கடந்த 12 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் செய்தி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Published by
சிவா