இதுவா 340 கோடி வசூல் பண்ணுச்சு?... OTT-யில் சூர்யாவின் 'கருப்பு' படத்தை பார்த்து கதறும் நெட்டிசன்கள்!
Jun 18, 2026, 18:46 IST
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் சூர்யா. இவரின் ரசிகர்கள் ஒரு வெற்றிப் படத்துக்காக வெயிட் பண்ணிக் கொண்டிருந்தனர்.
அவர்கள் கொண்டாடுவதற்காகவே ஆர்ஜே பாலாஜி இயக்கி, நடித்த படம் தான் 'கருப்பு'. கடந்த மே மாதம் 15-ஆம் தேதி தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் திரையரங்குகளில் வெளியான இப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் தான் வந்தது.
இருப்பினும் சூர்யாவின் ரசிகர்கள் இப்படத்தை ரசித்து தள்ளியதுடன், பாக்ஸ் ஆஃபிஸிலும் வசூல் மழை பொழிய வைத்தனர். அதுவும் 100 கோடி, 200 கோடி இல்லை, ரூ.340 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது.
கடந்த ஜூன் 12-ஆம் தேதி இந்த படம் பிரபல OTT தளமான அமேசான் ப்ரைமில் வெளியிடப்பட்டது. தற்போது, OTT-யில் பார்த்த ரசிகர்கள் இதுவா ரூ.340 கோடி வசூல் பண்ணுச்சு? என்று சமூக வலைத்தளங்களில் புலம்பி ஸ்டேட்டஸ் தட்டிய வண்ணமுள்ளனர்.
