Thalaivar 173: வேட்டையனாக ரஜினி.. பேயாக கமல்!.. சுந்தர்.சியை வச்சி செய்யும் நெட்டிசன்கள்!..
ஜெயிலர் 2 படத்திற்கு பின் சுந்தர்.சி இயக்கத்தில் ரஜினி நடிப்பது உறுதியாக விட்டது. இந்த படத்தை ரஜினியின் நண்பர் கமலின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இது ரஜினியின் 173வது திரைப்படமாகும். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று மாலை திடீரென வெளியானது. 1997ம் வருடம் சுந்தர்.சி இயக்கத்தில் ரஜினி நடித்த அருணாச்சலம் படம் வெளியானது. அதன் பின் இருவரும் இணையவில்லை. 28 வருடங்கள் கழித்து தற்போது இந்த கூட்டணி மீண்டும் இணைந்திருக்கிறது.
கடந்த பல வருடங்களாகவே ரஜினி ரத்தம் தெறிக்கும் ஆக்சன் காட்சிகளைக் கொண்ட திரைப்படங்களில் மட்டுமே தொடர்ந்து நடித்து வந்தார். எனவே சுந்தர்.சி போன்ற ஜாலியாக படமெடுக்கும் இயக்குனருடன் அவர் கைகோர்த்திருப்பது ரஜினி ரசிகர்களிடமும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சுந்தர்.சி தற்போது மூக்குத்தி அம்மன் 2 படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்தவுடன் ரஜினி படத்தின் சூட்டிங் தொங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது ரஜினியின் 173வது திரைப்படமாகும்.

அரண்மனை படத்தில் இருந்து சுந்தர்.சி ஹாரர் காமெடி வகை படங்களை தொடர்ந்து இயக்கி வருகிறார். அரண்மனை 2, அரண்மனை 3, அரண்மனை 4 வரை எடுத்தார். எனவே ரஜினியை வைத்தும் அவர் இயக்கவுள்ள படத்தை இதோடு ஒப்பிட்டு ரசிகர்கள் ட்ரோல் செய்து வருகிறார்கள். அதாவது, ரஜினியை வைத்து சுந்தர்.சி ஹாரர் காமெடி படம் எடுக்கப்போகிறார். அதில் வேட்டையனாக ரஜினி, பேயாக கமல் என்றெல்லாம் மீம்ஸ் போட்டு அவரை ரசிகர்கள் கலாய்த்து வருகிறார்கள்.
ஜெயிலர் 2 படத்தின் படப்பிடிப்பு அடுத்த வருடம் பிப்ரவரி மாதம் முடியும் என சொல்லப்படும் நிலையில் அனேகமாக அடுத்த வருடம் மார்ச் மாதத்திற்கு பின் தலைவர்173 பட வேலைகள் துவங்கும் என கணிக்கப்படுகிறது. இந்த படம் 2027ம் வருடம் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
