சிங்கப்பெண் சீருடையில் கூல் சுரேஷ்!.. தேவையில்லாத ஆணின்னு புடுங்கும் நெட்டிசன்கள்!..

 
suresh

தமிழ் சினிமாவில் திரைப்பட புரமோஷன் என்றாலே ரசிகர்கள் முதலில் எதிர்பார்ப்பது கூல் சுரேஷின் வருகையைத்தான். வழக்கமான விளம்பர முறைகளை விட வித்தியாசமான தோற்றம், எதிர்பாராத கருத்துக்கள் மற்றும் பரபரப்பான செயல்கள் மூலம் கவனத்தை ஈர்க்கும் அவர், தற்போது மீண்டும் ஒரு புதிய சர்ச்சையின் சிக்கியுள்ளார்.

இன்று வெளியாகியுள்ள "ஆட்டி" திரைப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கூல் சுரேஷ், அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் வகையில் சிங்கப்பெண் அதிரடிப்படை சீருடையை அணிந்து வந்திருந்தார். மேடையில் பேசிய அவர், பெண்களின் வலிமையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்த திரைப்படம் மக்களிடம் சென்றடைய வேண்டும் எனக் கூறியதோடு, பெண்களின் சக்தியை படம் அழகாக வெளிப்படுத்தியுள்ளதாகவும் பாராட்டினார்.

ஆனால் அவரது இந்த தோற்றம் சமூக வலைதளங்களில் பெரிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.  சீருடையை திரைப்பட விளம்பரத்திற்காக பயன்படுத்தியது சரியானதா என்ற கேள்வி இணையத்தில் எழுந்துள்ளது.

இதற்கிடையில், நிகழ்ச்சியில் இடம்பெற்ற மற்றொரு சம்பவமும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நிகழ்ச்சியில் பேசும் வரிசை குறித்து கருத்து தெரிவித்த கூல் சுரேஷ், "முதலில் இயக்குநர் பேச வேண்டும். அதன் பிறகுதான் மற்றவர்கள் பேச வேண்டும். எல்லாவற்றிற்கும் ஒரு புரோட்டோகால் இருக்க வேண்டும்" என்று கூறினார். 

இந்த நிலையில், "ஆட்டி" திரைப்படத்தின் கதை, நடிகர்கள் மற்றும் ட்ரெய்லர் குறித்து பேசப்படுவதைக் காட்டிலும், அதன் புரமோஷன் நிகழ்ச்சியில் கூல் சுரேஷ் அணிந்த உடை மற்றும் அவர் பேசிய கருத்துக்கள்தான் தற்போது இணையத்தில் அதிகம் பேசப்படும் விஷயமாக மாறியுள்ளது.

திரைப்பட புரமோஷனுக்காக கவனத்தை ஈர்க்கும் முயற்சியா? அல்லது தேவையற்ற சர்ச்சையா? என்பது குறித்து சமூக வலைதளங்களில் விவாதங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. ஆனால் ஒரு விஷயம் மட்டும் உறுதி கூல் சுரேஷ் பங்கேற்ற எந்த நிகழ்ச்சியும் அமைதியாக முடிவதில்லை என்பதையே இந்த சம்பவமும் மீண்டும் நிரூபித்துள்ளது.

Tags

From Around the web