சிவகார்த்திகேயன் வாய் முகூர்த்தம் என்ன இப்படி டேமேஜ் ஆக்குது!.. ஜன நாயகன் முதல் டான் இயக்குநர் வரை!
ஜன நாயகன் ஜனவரி 9 ரிலீஸ் ஆகுது முதலில் அதை கொண்டாடுங்க, அப்புறம் என்னோட பராசக்தி படத்தை ஜனவரி 10ம் தேதி வந்து பாருங்க என சிவகார்த்திகேயன் பேசினார். ஆனால், இன்னமும் ஜன நாயகன் படமே வரவில்லை. அவரோட பராசக்தி படத்தையும் ரசிகர்கள் தியேட்டரில் சென்று பார்த்துக் கொண்டாடவில்லை.
இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் மீண்டும் தோனி களமிறங்கப் போகிறார் என்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் கப் அடிக்கும் என்கிற நினைப்பில் அடியே ஓஜி இஸ் பேக் டி என சேயோன் பட வசனத்தை ஐபிஎல் தொடக்க விழாவில் கலந்துக்கொண்டு சிவகார்த்திகேயன் பேசினார்.
ஆனால், இந்த ஆண்டு ஒரு போட்டியில் கூட தல தோனியால் விளையாட முடியாத நிலை ஏற்பட்டு விட்டது என பங்கமாக சிவகார்த்திகேயனை கலாய்த்து வருகின்றனர். அனைத்தையும் விட தன்னை வைத்து டான் படத்தை இயக்கிய சிபி சக்கரவர்த்தி அடுத்து ரஜினிகாந்தின் தலைவர் 173 படத்தின் இயக்குநர் என ஓவராக புகழ்ந்து தள்ளினார் சிவகார்த்திகேயன்.
SK about JN : Celebrate JN on Jan 9
— HEY RAM (@A_n_b_e_S_i_vam) June 25, 2026
Result :JN didn't release yet
SK about Dhoni : The OG is back di..
Result : Dhoni didn't play single match
SK about Cibi : Thalaivar Movie
director Cibi..
Result : Cibi got removed
Jinx king SK😭 pic.twitter.com/W3oMLBSGIe
ஆனால், அதிரடியாக அவரை தூக்கி விட்டு பிரதீப் ரங்கநாதனை வைத்து பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்த அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் தர்மன் படத்தில் ரஜினிகாந்த் நடிக்கத் தொடங்கி விட்டார். ஒரே ஆண்டில் அடுத்தடுத்து ஹாட்ரிக் பல்புகளை சிவகார்த்திகேயன் வாங்கியுள்ளார் என்றும் அடுத்த முறை ரஜினிகாந்த் புலம்பியது போல நாம என்ன பேசினாலும் பிரச்னையாக மாறிவிடுகிறது என்று தான் புலம்புவார் என்று கிண்டல் செய்து வருகின்றனர். சேயோன் ஆடியோ லாஞ்சில் கண்டிப்பாக அப்போ சம்பவம் உறுதி.
