×

இன்னுமா இந்த மாதிரி படம்லாம் வருது… சைலன்ஸை கிழிக்கும் நெட்டிசன்ஸ்!

மாதவன் மற்றும் அனுஷ்கா நடிப்பில் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ள சைலன்ஸ் படத்தைப் பலரும் கழுவி ஊற்ற ஆரம்பித்துள்ளனர்.

 

மாதவன் மற்றும் அனுஷ்கா நடிப்பில் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ள சைலன்ஸ் படத்தைப் பலரும் கழுவி ஊற்ற ஆரம்பித்துள்ளனர்.

தமிழ் சினிமாவில் வந்த இரண்டு முக்கியமான சீரியல் கில்லர் படங்கள் என்றால் அது சிகப்பு ரோஜாக்கள் மற்றும் மன்மதன். இந்த இரண்டு படங்களும் வெளியான போது சிறப்பான வரவேற்பைப் பெற்றாலும், அதன் பின்னர் மோசமான விமர்சனங்களைப் பெற்றன. ஏனென்றால் அதன் கதையமைப்பு. தங்களை ஏமாற்றிய பெண்களை எல்லாம் கதாநாயகன் கடத்திக் கொலை செய்வது. அதிலும் சிவப்பு ரோஜாக்கள் படத்தின் நாயகனாவது ஒரு சைக்கோ என இயக்குனர் காட்டியிருப்பார். ஆனால் மன்மதன் படத்தில் வரும் நாயகனோ இயல்பான மனிதன். அப்படி இருக்கையில் மற்றொருவரைக் கொலை செய்யும் உரிமையை இவர்களுக்கு யார் கொடுத்தது என்ற கேள்விகள் எழுந்தன.

இந்நிலையில் இப்போது ஓடிடியில் வெளியாகியுள்ள சைலன்ஸ் திரைப்படமும் இதுபோன்ற கதையமைப்பைக் கொண்டதுதான். தன்னை ஏமாற்றிய மனைவியைக் கணவன் தனியாக ஒரு பங்களாவுக்கு அழைத்து வந்து கொலை செய்வதுதான் கதௌ. இன்னுமா இதுபோன்ற கதைகள் எல்லாம் வருகின்றன எனவும் கேள்வி எழுப்பியுள்ளனர். இதுபற்றி பலரும் மனைவி ஏமாற்றினால் கணவன் விவாகரத்துதானே செய்ய வேண்டும். ஏன் தமிழ் சினிமாவில் மட்டும் கொலை செய்கிறான் எனக் கேள்வி எழுப்பியுள்ளனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News