உடையை பிடித்துகொண்டுவர ஒருவரா? ட்ரோலில் சிக்கிய நித்தி அகர்வால்

 
உடையை பிடித்துகொண்டுவர ஒருவரா? ட்ரோலில் சிக்கிய நித்தி அகர்வால்

ஃபிலிம்பேர் விருது வழங்கும் விழா கொச்சியில் நேற்று நடைபெற்றது. இதில் சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பல தென்னிந்திய திரை பிரபலங்கள் கலந்துகொண்டார்கள். இதில் நித்தி அகர்வாலும் ஒருவர்.

தென் இந்தியாவின் சினிமா விருதுகளில் ஃபிலிம்பேர் விருது முக்கியமான் ஒன்று. நேற்று 70ஆவது ஃபிலிம்பேர் விருது விழா கேரள மாநிலம் கொச்சியில் நடைபெற்றது. இதில் 2024-ஆம் ஆண்டு வெளியான சிறந்த தென்னிந்திய திரைப்படங்களைக் கௌரவிக்கும் வகையில் இந்த விருதுகள் வழங்கப்பட்டன. தமிழ் சினிமாவில் குறிப்பாக 'அமரன்' மற்றும் 'மெய்யழகன்' ஆகிய திரைப்படங்கள் அதிக விருதுகளைப் பெற்றுள்ளன. விழாவினை விஷ்ணு வாரியர் மற்றும் ரஞ்சினி ஹரிதாஸ் ஆகியோர் தொகுத்து வழங்கினர். நித்தி அகர்வால், சான்யா மல்ஹோத்ரா மற்றும் அபர்ணா பாலமுரளி ஆகியோரின் நடன நிகழ்ச்சிகள் விழாவைக் கலைகட்டச் செய்தன.

வ்பிழாவில் நித்தி அகர்வாலின் உடை தொடர்பான சம்பவம் சமூகவலைதளங்களில் ட்ரோல் செய்து வருகின்றனர். அதாவது அவர் அணிந்திருந்த உடை அதாவது நிதி அகர்வால் இந்த விழாவுக்கு ஷீர் கார்செட் கவுன் ஒன்றினை அணிந்துவந்தார். அந்த உடை ரொம்பவே நீளமாக இருந்த காரணத்தால் அதன் ட்ரெயல் பகுதியை அவரது உதவியாளர் ஒருவர் பிடித்துக்கொண்டு வந்தார். இதனை கண்ட ரசிகர்ள் அதனை ட்ரோல் செய்து வருகின்றனர்.

நித்தி அகர்வால் தமிழில் ஜெயம் ரவியுடன் பூமி மற்றும் உதயநிதியுடன் கலகத்தலைவன் போன்ற படங்களில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

https://twitter.com/Chrissuccess/status/2025269037073056083?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2025269037073056083%7Ctwgr%5E6836141487c1840b850c1e43147236b4311ea3eb%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Ftamil.filmibeat.com%2Fheroines%2Fnidhhi-agerwal-trolled-online-after-assistant-holds-her-dress-at-filmfare-awards-south-in-kochi-172431.html

From Around the web