×

விரைவில் புதிய அறிவிப்பு...இப்படி மாறிட்டாரே தல...!. மகிழ்ச்சியில் அதிர்ச்சி ரசிகர்கள்.... 

வலிமை படத்திற்கு பின் அஜித் நடிக்கும் புதிய திரைப்படம் பற்றிய தகவல் வெளியே கசிந்துள்ளது.
 

நடிகர் தல அஜித் கடந்த பல வருடங்களாகவே திரைத்துறை தொடர்பான எந்த விழாக்களிலும் கலந்து கொள்வதில்லை. தற்போது அவர் வினோத் இயக்கத்தில் உருவாகி ‘வரும்’ வலிமை படத்தில் நடித்து வருகிறார். ஆனால், கொரோனா பரவல் காரணமாக தமிழக அரசு படப்பிடிப்புகளுக்கு தடை விதித்துள்ளதால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது.

மேலும், கொரோனா பரவல் முழுவதுமாக குறைந்த பின்னரே படப்பிடிப்பை வைத்துக்கொள்வோம் என தயாரிப்பாளர் போனி கபூரிடம் அஜித் கூறிவிட்டாராம். மேலும், கடந்த 5 மாதங்களாக அவர் யாரையும்  5 மாதமாக யாரையும் சந்திக்கவில்லை. தொலைப்பேசியில் மட்டுமே பேசி வந்தார்.

இந்நிலையில், என்ன நினைத்தாரோ தெரியவில்லை. அவரிடம் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இரண்டு இயக்குனர்களை நேரில் அழைத்து கதையை கேட்ட அஜித், அதில் ஒருவரை தேர்வு செய்துள்ளாராம். வலிமை படப்பிடிப்பு முடிந்தவுடன் புதுபட வேலையில் அவர் இறங்குவார் எனத்தெரிகிறது. இது தொடர்பான செய்தி இன்னும் 2 வாரம் கழித்து வெளியாகும் என செய்திகள் கசிந்துள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News