×

14 மாவட்டங்களில் புதிய தொழிற்சாலைகள் - முன்னேறும் தமிழகம்!

 

கொரோனா பிடியிலிருந்து விலகி தமிழகத்தி முன்னேற்றப்பாதையில் கொண்டு செல்லும் முயற்சியில் தமிழக அரசு ஈடுபட்டுள்ளது. இதற்காக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பல அதிரடியான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

இந்த ஆண்டுன் முதல் 6 மாதங்களில் முதலீடுகளை ஈர்ப்பதில் இந்தியாவில் தமிழகம் முதல் இடத்தில் இருக்கிறது. தமிழகத்தில் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு வேலை வாய்ப்பை உருவாக்கும் வகையில் ரூ.10 ஆயிரத்து 55 கோடி மதிப்பில் முதலீடுகள் ஈர்க்கப்பட்டு புதிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளது. இதற்காக 14 திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளது.இதன் தொடக்கமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, ராமநாதபுரம், திருப்பூர், திருவண்ணாமலை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் புதி திட்டங்கள் செயல்படுத்தபடவுள்ளது.

தூத்துக்குடி, நெல்லை, தென்காசி மற்றும் திருப்பூரில் 810 மெகாவாட் அளவு கலப்பு மின்சாரம் தயாரிக்கும் திட்டத்திற்கு ரூ.6300 கோடி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல், ராமேஸ்வரத்தில் 50 மெகா வாட் காற்றாலை மின்சார திட்டம் துவங்கப்படவுள்ளது. இந்த திட்டத்தில் ஏறக்குறைய 2500 பேர் வேலை வாய்ப்பு பெறுவார்கள் என சம்பந்தப்பட்ட நிறுவனம் தெரிவித்துள்ளது.

eps

திருநெல்வேலியில் உள்ள கங்கைகொண்டான் சிப்காட்டில், பிஸ்கட் தயாரிக்கும் நிறுவனமான பிரிட்டானியா தனது ஆலையை விரிவுபடுத்துவதற்காக ரூ.250 கோடி மதிப்பில் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை அரசுக்கு வழங்கியுள்ளது. அதேபோல், காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடத்தில் தொழில்துறை தளவாட பூங்கா அமைக்கும் திட்டத்தில் ரூ.750 கோடி முதலீடு செய்ய முன்வந்துள்ளது. இதன் மூலம் சுமார் 500 பேர் வேலை வாய்பு பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்து, சென்னை அருகே டேட்டர் செண்டர் அமைக்கப்படவுள்ளது. இதற்காக ரூ.750 கோடி முதலீடு செய்யப்படவுள்ளது. இதில், 550 பேர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்க வாய்ப்புண்டு. அதேபோல், ரூ.200 கோடி செலவில் சென்னைக்கு அருகே கார்பன் பைபர் தகடுகளை தயாரிக்கும் நிறுவனம் வரவுள்ளது.  இதன் மூலம் 250 பேர் வேலை வாய்ப்பு பெறுவார்கள்.

மேலும்,  மின் குப்பைகளை அகற்றுவதற்கும், மறுசுழற்சி செய்வதற்கும் மின் கழிவு மேலாண்மை வசதியை அமைக்கும் திட்டம் உள்ளது. இதற்காக ரூ.50 கோடி முதலீடு ஒதுக்கப்படவுள்ளது. இதனால் 750 பேர் வேலைவாய்ப்பை பெறுவார்கள். அதேபோல், ஒரக்கடத்தில் காற்றாலைகளை தயாரிக்கும் விரிவாக்க திட்டமும் அரசுக்கு உள்ளது.
சென்னைக்கு  அருகேயுள்ள ஸ்ரீபெரும்புதூரில் தென்கொரியாவின் ஹூண்டாய் நிறுவனம் ரூ.109 கோடி முதலீட்டில் தனது நிறுவனத்தை விரிவு படுத்தப்படவுள்ளது. மேலும், அப்பல்லோ டயர்ஸ் நிறுவனம் சார்பில் சென்னை, காஞ்சிபுரம் மாவட்டம் மற்றும் ஒரக்கடம் சிப்காட் தொழில் பூங்காவில் டயர்கள் தயாரிப்பதற்கான திட்டம் முன்மொழியப்பட்டுள்ளது. இதன் மூலம் பலரும் வேலை வாய்ப்பை பெறவுள்ளனர்.

குறிப்பாக அமெரிக்கா, ஸ்பெயின், ஹாங்காக், சிங்கப்பூர், தென்கொரிய என பல நாடுகள் இந்த திட்டங்களை செயல்படுத்தபவுள்ளன.

From around the web

Trending Videos

Tamilnadu News