×

இனி சண்டைக்கு நாங்க கியாரண்டி.. கமலை கழற்றிவிட்ட பிக்பாஸ் குழு... 

தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியின் இந்த வருட சீசனை கமல் தொகுத்து வழங்க மாட்டார் என்ற தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
 
 
இனி சண்டைக்கு நாங்க கியாரண்டி.. கமலை கழற்றிவிட்ட பிக்பாஸ் குழு...

100 நாட்கள் ஒரே வீடு எந்தவித வெளியுலக தொடர்பும் இல்லாத வாழ்க்கை எப்படி இருக்கும். இப்படி தொடங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது உலகத்தின் எல்லா மொழிகளிலும் பேமஸாக இருக்கிறது. தமிழில் நான்கு சீசன்கள் முடிந்துள்ளன. கடந்த வருட கொரோனா பிரச்சனையால் ஜூனில் நடக்க வேண்டிய நிகழ்ச்சி அக்டோபர் மாதம் தொடங்கி இவ்வருட ஜனவரி முதல் நடைபெற்றது.

இந்நிலையில், இந்த வருடத்தின் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கான வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறதாம். கடந்த வருடம் போல் இல்லாமல் சரியாக ஜூனிலே நிகழ்ச்சியை துவங்க அக்குழு முடிவு செய்துள்ளது. இதற்காக போட்டியாளர்கள் தேர்வு செய்யும் பணியும் நிகழ்ந்து வருகிறது. ஆனால், நிகழ்ச்சியை நடத்த வேண்டிய கமல்ஹாசனோ தேர்தலில் பிஸியாக இருக்கிறார். தேர்தல் முடிந்தும் அவர் பிக்பாஸிற்கு வருவது சந்தேகம் என்கிறது தொலைக்காட்சி வட்டாரம். 

இதனால், அவருக்கு பதில் நடிகர் சிம்புவை நிகழ்ச்சியை தொகுத்து வழங்க பேச்சுவார்த்தையில் எண்டோமால் சைன் நிறுவனம் ஈடுபட்டு இருக்கிறதாக தகவல்கள் தெரிவிக்கிறது. ஏற்கனவே விஜய் தொலைக்காட்சியில் ஜோடி நம்பர் 1 நிகழ்ச்சியில் நடுவராக இருந்து சண்டையில் ஈடுபட்டு சிம்பு வைரலான சேதி அனைவரும் அறிந்ததே. இதனால் இந்த வருட பிக்பாஸ் நிகழ்ச்சி கலைக்கட்டும் என்பதில் சந்தேகமே இல்லை என்கிறது தயாரிப்பு தரப்பு. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது. 

From around the web

Trending Videos

Tamilnadu News