×

அமீர்கானை தொடர்ந்து மாதவன்... சிக்கி தவிக்கும் பாலிவுட்... 

கொரோனா இரண்டாவது அலையில் பாலிவுட் பிரபலங்கள் பலரும் கொரோனாவால் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
 
அமீர்கானை தொடர்ந்து மாதவன்... சிக்கி தவிக்கும் பாலிவுட்...

கொடிய தொற்று நோயாக உருமாறி இருக்கும் கொரோனாவின் இரண்டாவது அலை தற்போது இந்தியாவில் துவங்கி இருக்கிறது. இதில் பொது மக்களை போல திரை பிரபலங்கள் பலரும் சிக்கி தவிக்கின்றனர். அதிலும், பாலிவுட் ஹீரோக்கள் வரிசையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். 

சமீபத்தில் நடிகர்கள் ஆசிஷ் வித்யார்த்தி, அமீர்கான், கார்த்திக் ஆர்யன், ரன்பீர் கபூர் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் கொரோனா தொற்று ஏற்பட்டதால் பாலிவுட்டே சற்று அதிர்ச்சியில் ஆழ்ந்தது. இந்நிலையில், நடிகர் மாதவனுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பதாக ட்விட்டரில் தெரிவித்து இருக்கிறார். அந்த ட்வீட்டை கூட தனது படமான த்ரீ இடியட்ஸுடம் ஒப்பிட்டு பதிவு செய்துள்ளார்.


இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள ட்வீட்டில், ராஞ்சோவைப்(அமீர்கான்) ஃபர்ஹான்(மாதவன்) பின்தொடர வேண்டும். வைரஸ்(பொம்மன் இரானி) எப்போதுமே எங்களுக்குப் பின்னால் இருக்கிறார். ஆனால் இந்த முறை எங்களை பிடித்து விட்டார். ஆனால் ஆல் இஸ் வெல். இந்த ஒரு இடத்துக்கு ராஜு(ஷர்மான் ஜோசி) வரக் கூடாது என நினைக்கிறோம். எல்லார் அன்புக்கு நன்றி எனக் குறிப்பிட்டுள்ளார். மாதவன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ராக்கெட்ரி படத்தின் போஸ்ட் ப்ரோடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

From around the web

Trending Videos

Tamilnadu News