Categories: Cinema News latest news television

இனி அவருக்கு பதில் இவர்… புதிய கண்ணம்மாவுக்கு சிவப்பு கம்பளம் வரவேற்பு!

பாரதி கண்ணம்மா சீரியலின் புதிய கண்ணம்மா இன்று முதல் தொலைக்காட்சியில்!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாரதி கண்ணம்மா சீரியல் TRPயின் உச்சத்தில் இருக்கும் சீரியல். இந்த சீரியலில் கண்ணம்மாவை கணவர் சந்தேகப்பட்டதால் சண்டையிட்டு கோபித்துக்கொண்டு நடைபயணம் செய்த எபிசோட் கிண்டலுக்கும், கேலிக்கும் உள்ளாகி மீம்ஸ் ரெக்க கட்டி பறந்தது.

அதன் மூலம் இந்த சீரியல் பார்க்க தொடங்கியவர்கள் ஏராளம் பேர் உள்ளனர். 2019ம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் இந்த சீரியலில் பாரதியாக மேயாத மான் என்ற படத்தில் நடித்த அருண் பிரசாத் நடிக்கிறார். ரோஷினி ஹரிப்ரியன் கண்ணம்மாவாக நடித்தார்.

இதையும் படியுங்கள்: இவருக்கெல்லாம் ஜோடியா நடிக்க முடியாது: ஓட்டம் பிடித்த நயன்தாரா……

இந்நிலையில் சீரியலின் ஹீரோயின் ரோஷினி ஹரிப்ரியனுக்கு சினிமா வாய்ப்புகள் கிடைத்ததால் சீரியலில் இருந்து விலகிவிட்டதாக செய்திகள் படித்தோம். தற்போது புதிய கண்ணம்மாவாக வினுஷா ஒப்பந்தம் செய்யப்பட்டு நடித்து வருகிறார்.

அதன் எபிசோட் ரசிகர்களின் கவனத்தை அதிகரித்துள்ளது. காரணம் ரோஷினி இடத்தை வினுஷா தக்கவைப்பாரா என்பது தான். நிச்சயம் அது முடியும் என்றே சொல்லலாம். ஆம், கண்ணம்மாவை போலவே முகஜாடை கொண்டிருக்கும் வினுஷாவை மக்கள் விரைவில் ஏற்றுக்கொள்வார்கள் என எதிர்பார்க்கலாம்.

பிரஜன்
Published by
பிரஜன்