×

புதிய படமா?...திருமணமா?....டிசம்பரில் ஒரு மாஸ் அறிவிப்பை வெளியிடும் சிம்பு!..

 

பல பஞ்சாயத்துகளுக்கு பின் நடிகர் சிம்பு கடைசியாக வெங்கட்பிரபு இயக்கத்தில் மாநாடு திரைப்படத்தில் நடித்து வந்தார். ஆனால், கொரொனா ஊரடங்கால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. இது சிம்பு ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்தது.

இதைத்தொடந்து மாநாடு திரைபப்படம் கை விடப்பட்டதாக கூட செய்திகள் வெளியானது. ஆனால், அப்படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அதை மறுத்தார்.

இந்நிலையில், மாநாடு திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கும் என சிம்பு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வருகிற டிசம்பர் மாதம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிடவுள்ளதாக சிம்பு கூறியுள்ளாராம். அது தனது அடுத்த பட அறிவிப்பா அல்லது அவரது சொந்த வாழ்க்கை பற்றியதாக என்பது தெரியவில்லை.

From around the web

Trending Videos

Tamilnadu News