Categories: Cinema News latest news

விடாமுயற்சி ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சியில் அஜித்தா? படக்குழுவின் பக்கா ப்ளான்…

கோலிவுட்டே அல்லோலப்பட்டு கொண்டு இருக்கும் நிலையில் ஹாயா பைக் ரைட் சென்றுக்கொண்டு இருக்கும் அஜித்தின் விடாமுயற்சி குறித்து தற்போது மிக முக்கிய தகவல்கள் கசியத் தொடங்கி இருக்கிறது.

அஜித்குமார் நடிப்பில் கடைசியாக திரைக்கு வந்த திரைப்படம் தான் துணிவு. இப்படத்தில் மஞ்சிமா அவருடன் இணைந்து நடித்திருந்தார். படமும் வசூல் ரீதியாக வெற்றி படமாகவே அமைந்தது. இதை தொடர்ந்து அவரின் அடுத்தப்படம் என்னவாக இருக்கும் என பலரிடமும் எதிர்பார்ப்புகள் இருந்தது. ஏன்னா, ஒரே வாரத்தில் அவருடன் வெளியான விஜய் வாரிசு படத்தினை முடித்து விட்டு லியோ படத்தின் வேலைகளையுமே முடித்து விட்டார். படமும் தீபாவளி ரிலீஸுக்கு காத்திருக்கிறது.

இதையும் படிங்க: என் படம் கூட ஜெயிலரை கம்பேர் பண்ணாதீங்க.. கொந்தளித்த பாட்ஷா பட இயக்குநர்

இப்படத்தின் நாயகி த்ரிஷா என்ற அறிவிப்புடன் படத்தின் படப்பிடிப்புகள் நான்கு மாதங்களுக்கும் மேலாக தள்ளிப்போய் கொண்டே இருக்கிறது. பல காலதாமங்களுக்கு பின்னர் இப்படத்தின் படப்பிடிப்பு செப்டம்பரில் தொடங்கலாம் என்ற தகவல்கள் வெளியாகி இருக்கிறது. 

இதையும் படிங்க- இந்த முறை பின் வாங்குறதே இல்லை!.. அடுத்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு!.. ஜெயிலர் மொத்த வசூல் இவ்ளோவா!..

இத்தனை பிரச்னையால் தன்னுடைய ரசிகர்கள் சோர்ந்து போய் இருப்பதாக அஜித்திடம் படக்குழு ஒரு கோரிக்கையை முன்வைத்து இருக்கிறது. அதில் விடாமுயற்சியை சீக்கிரம் முடித்து அப்படத்தின் ஆடியோ ரிலீஸில் அஜித் கலந்து கொள்ள வேண்டும் எனக் கேட்டு இருக்கின்றனர். இதற்கு தல தரப்பில் இருந்து க்ரீன் சிக்னலே வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது. 

Published by
Shamily