Categories: Cinema News latest news

ஸ்வேதா மிஸ் நல்லா இருக்காங்களா.?! சிவகார்த்திகேயனின் அக்கறை.! கடுப்பாகிய எஸ்.ஜே.சூர்யா.!

கடைசியாக சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி பெரிய வெற்றிபெற்ற திரைப்படம் டான். இத்திரைப்படத்தை அறிமுக இயக்குனர் சிபிசக்கரவர்த்தி இயக்கியிருந்தார். அனிருத் இசையமைத்திருந்தார். லைகா நிறுவனமும் சிவகார்த்திகேயனும் இந்த படத்தை தயாரித்திருந்தனர்.

இப்படத்தில் நாயகியாக பிரியங்கா மோகன் நடித்து இருப்பார். கல்லூரி பேராசிரியராக எஸ்.ஜே.சூர்யா, சிவகார்த்திகேயன் தந்தையாக சமுத்திரக்கனி என அனைவரும் சிறப்பாக நடித்திருந்தனர். அதனால் இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது.

இந்த திரைப்படம் இன்று முதல் நெட்ப்ளிக்ஸ் OTT தளத்தில் வெளியாகி உள்ளது. இதன் பொருட்டு சிவகார்த்திகேயன் மற்றும் எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் ஒரு ப்ரோமோ விளம்பரத்தில் நடித்துள்ளனர்.

படத்தில் வரும் அந்த கல்லூரி ஆபீஸ் ரூம் காட்சிபோல், இதில்  எஸ்.ஜே.சூர்யா லேப்டாப் உபயோகப்படுத்திக் கொண்டிருக்கும் போது சிவகார்த்திகேயன் உள்ளே வந்து படத்தை புரமோட் செய்யுமாறு கூறுகிறார். உடனே எஸ்.ஜே.சூர்யா எனது நண்பர் டான் HD பிரிண்ட் இருக்குமா என்று கேட்டார் நான் இல்லை நெட்பிளிக்ஸ் தளத்தில் இருக்கிறது சென்று பார்த்து கொள்ளுங்கள் என்று கூறி விட்டேன். எனக் கூறுகிறார்.

இதையும் படியுங்களேன் – விக்னேஷ் சிவன் தாலி கட்டிய நேரம் சரியில்ல…! ஜோசியம் சொல்லும் நெருங்கிய உறவினர்…..

உடனே, சிவகார்த்திகேயன்,  ‘டான் திரைப்படம்  நெட்பிளிக்ஸில்  ரிலீசாகி உள்ளது. அனைவரும் பாருங்கள்.’ என கூறினார். கடைசியாக சிவகார்த்திகேயன் செல்லும்போது, ‘ சார் அந்த ஸ்வேதா மிஸ் எப்படி இருக்காங்க? ‘ என்று கேட்பார். உடனே பேராசிரியராக இருக்கும்  எஸ்.ஜே.சூர்யா சட்டென கோபப்படுவது போல் அந்த வீடியோ முடிந்திருக்கும்.

டான் திரைப்படத்தின் ஒரு சில காட்சிகளே வந்தாலும் ஸ்வேதா மிஸ் கதாபாத்திரத்தில் நடித்திருந்த ஸ்வேதா வெங்கட் நடிகை ரசிகர்கள் மத்தியில் என பதிந்து விட்டார். இவ்வளவு இளமையான டீச்சர் இருக்க மாட்டாரா என்று பல இளைஞர்கள் அவருக்கு ஃபேன் பேஜ் எல்லாம் இணையத்தில் உருவாக்கி விட்டனர். அந்த அளவுக்கு வைரலாகி விட்டார் இந்த ஸ்வேதா டீச்சர்.

Manikandan
Published by
Manikandan