×

76 ஆண்டுகளுக்குப் பிறகு புதிய நீர்த்தேக்கம்: முதல்வர் நடவடிக்கையால் சென்னை மக்கள் மகிழ்ச்சி

சென்னை மக்களின் குடிநீர் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க 76 ஆண்டுகளுக்குப் பிறகு புதிய நீர்த்தேக்க அறிவிப்பை முதல்வர் நேற்று தொடங்கி வைத்தார்.
 

சென்னை மக்களின் குடிநீர் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க 76 ஆண்டுகளுக்குப் பிறகு புதிய நீர்த்தேக்க அறிவிப்பை முதல்வர் நேற்று தொடங்கி வைத்தார். 

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று சென்னை வருகை தந்தார். அப்போது சேப்பாக்கம் கலைவாணர் அரங்கில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் நடைபெற்ற விழாவில் அமித்ஷா புதிய நீர்த்தேக்கத்தை திறந்து வைத்தார்.

சென்னை மாவட்டத்தின் குடிநீர் தேவைகளை திருவள்ளூரில் உள்ள பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம் ஆகிய 4 ஏரி மற்றும் கடலூரில் வீராணம் ஏரி ஆகியவை தீர்த்து வைக்கின்றன. 

இந்நிலையில் சென்னை மாவட்ட குடிநீர் தேவைக்கக  மேலும் ஒரு புதிய திட்டத்தை நேற்று துவக்கிவைத்தார் முதல்வர். அதன்படி  திருவள்ளூர் மாவட்டத்தில் கண்ணன் கோட்டை மற்றும் தேர்வாய்கண்டிகை கிராமங்களில் உள்ள இரண்டு ஏரிகளை இணைத்து புதிதாக கண்டிகை நீர்த்தேக்கம் என்று உருவாக்கப்பட்டுள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கனவுத்திட்டமான இந்த அணையானது, 2013ம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டு, 380 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது. 1485 ஏக்கர் பரப்பளவில் உருவாகியுள்ள இந்த ஏரியில் 500 மில்லியன் கன அடி நீரை சேமிக்க முடியும். அதுமட்டுமின்றி ஆந்திர மாநிலத்திலிருந்து பெறப்படும் கிருஷ்ணா நதி நீர், கண்டலேறு – பூண்டி கால்வாயிலிருந்து 8.60 கிலோ மீட்டர் நீளத்திற்கு இணைப்புக் கால்வாய் அமைத்து இங்கு கொண்டு வரப்படும்.

இந்த திட்டத்தால் சென்னை மக்களின் குடிநீர் பயன்பாட்டிற்கு தினமும் 65 மில்லியன் லீட்டர் நீர் பெறப்படும் இந்த திட்டத்தால் சென்னை மக்கள் ம்க்கள் மிகழ்வும் மகிழ்ச்சி அடைந்த்னர். இது குறித்து பலரும் தங்களது மகிழ்ச்சியை சமூகவலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். 

From around the web

Trending Videos

Tamilnadu News