மாயவனை தொடந்து XY.. ரசிகர்களை கவரும் சயின்ஸ் பிக்சன்!.. புது பட அப்டேட்!...
ஸ்ரீகிருஷ் பிக்சர்ஸ் மற்றும் ஸ்ரீ இன்டர்நேஷனல் வழங்கும்“XY” – மாயவன் சினிமாட்டிக் யுனிவர்ஸில் அடுத்த மிகப்பெரும் அறிவியல் புனைவு படம்.
சென்னை, அக்டோபர் 2025: தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் மற்றும் பல மொழிகளில் விமர்சகர்களால் பாராட்டப்பட்டும், ரசிகர்களால் கொண்டாடப்பட்ட அறிவியல் புனைவு படைப்பான “மாயவனை”, தொடர்ந்து இயக்குனர் சி.வி.குமாரின் அடுத்த அதிரடி அறிவியல் புனைவு முயற்சி XY.
“XY” கதையம்சம், காட்சியமைப்பு, இசை மற்றும் கதாபாத்திரங்கள் வழியாக தமிழ் சினிமாவில் அறிவியல் புனைவு வகையை புதிய உயரத்திற்கு கொண்டு செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இத்திரைப்படத்தின் ஒளிப்பதிவை ஹரிஹரன் ஆனந்தராஜா கவனித்துகொள்ள, ஏ.ஆர்.ரஹ்மானுடன் பணியாற்றியதுடன் கிராமி விருது பெற்ற Divine Tides ஆல்பம்-இல் பங்காற்றிய ஶ்ரீகாந்த் இசையமைக்கிறார். தன்னுடைய கூர்மையான படத்தொகுப்பு பாணிக்கு பெயர் பெற்ற பி.கே எடிட்டிங் செய்கிறார். கலையை கேசவ் கவனிக்கிறார்.
ரத்திகா ரவீந்தர் (பிரபல தெலுங்கு நடிகை) மற்றும் அனிஸ் பிரபாகர் (அறிமுக நாயன்) முதன்மை கதபாத்திரங்ளில் நடிக்க வர்ஷினி வெங்கட், பிரனா, தேனீர் இடைவேளை பிரகதீஷ், ஸ்ரீதர், ரௌடி பேபி வர்ஷு, சேரன் அகாடமி ஹுசைன் ஆகியோர் வலுவான துணை கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.
பெரும் பொருட்செலவில் உருவாகும் இத்திரைப்படத்தை ஸ்ரீ கிருஷ் பிக்சர்ஸ் சார்பில் சாம்பசிவம் மற்றும் ஸ்ரீ இன்டர்நேஷனல் இணைந்து தயாரிக்கின்றனர் . இத்திரைப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
மாயவன் சினிமாட்டிக் யுனிவர்ஸ் பற்றி “மாயவன்” இந்திய சினிமாவில் மொழி கடந்து விமர்சகர்களால் பாராட்டப்பட்ட, கொண்டாடப்பட்ட சிறந்த அறிவியல் புனைவு படைப்புகளில் ஒன்றாகும். அதன் வெற்றியைத் தொடர்ந்து, “XY” புதிய கதாபாத்திரங்கள், பரபரப்பான சிந்தனைகள் மற்றும் மிகப்பெரும் காட்சியமைப்புகளுடன் அந்த யுனிவர்ஸை அடுத்த தளத்திற்கு எடுத்து செல்லும் என எதிர்பார்க்கபடுகிறது.
