Categories: Cinema News latest news throwback stories

இதெல்லாம் ஒரு கதையா?…கேஜிஎஃப் படத்தில் நடிக்க மறுத்த யாஷ்…லீக் ஆன ரகசியம்…

தமிழ் சினிமாவின் ஆகப்பெரும் ஹிட் படமாக இருப்பது கேஜிஎஃப் தான். யாஷ் நடிப்பில் இருபாகமாக வெளியாகி இருக்கும் இப்படத்தின் மூன்றாவது பாகம் தற்போது உருவாகி வருகிறது.

கன்னட படமாக உருவாகி வந்த கேஜிஎஃப் பின்னர் பேன் இந்தியா படமாக டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. படம் எதிர்பார்த்த அளவு பெரிய வரவேற்பை பெற்றது. கன்னடா முதற்கொண்டு தமிழ், தெலுங்கு எனச் சக்கை போடு போட்டது. தொடர்ந்து இரண்டாம் பாகம் சமீபத்தில் வெளியானது. அப்படமும் அதிரிபுதிரி ஹிட்டாக அமைந்தது.

இந்நிலையில் இப்படத்தின் இயக்குனர் பிரசாந்த் நீல் சொன்ன கதை வேறு என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. படத்தில் தங்க சுரங்கம் குறித்து ஒரு சின்ன பகுதியாக மட்டுமே நீல் எழுதி வேறு மாதிரியான கதையை யாஷிடம் சொல்லி இருக்கிறார். ஆனால், யாஷ் தான் தங்க சுரங்கம் வித்தியாசமாக இருக்கிறது. இதை டெவலப் செய்து எழுதிக் கொண்டு வருமாறு கூறினாராம்.

அதை தொடர்ந்தே, இயக்குனர் படத்தை மாற்றி எழுதி டான் கதையில் வில்லனை கொல்ல மழையில் டீல் பேசும் காட்சியை எழுதி அதையே முதல் சீன்னாகவும் யாஷிடம் சொல்லியிருக்கிறார். அதுமட்டுமல்லாது படத்தில் வயலன்ஸ் டயலாக் முதற்கொண்டு அனல் பறக்கும் பஞ்ச் பெரும்பாலனவற்றை சொன்னது நடிகர் யாஷ் தான் என்ற தகவலும் வெளியாகி இருக்கிறது.

Published by
Manikandan