ஒன்னு இல்ல இனி மூணு நாளும் ஜியோ ஹாட்ஸ்டார் அதிரடி!... கொண்டாட்டம் தான்

ஹாட்ஸ்டாரில் வெப்சீரிஸ் எண்ட்ரிகள் களைக்கட்டி வருகிறது. 
 
hotstar

தமிழ் சினிமாவில் திரைப்படங்களை தாண்டி தற்போது அதிக புகழை பெற்று வருகிறது வெப்சீரிஸ். அந்தவகையில் தற்போது அதிகமான வெப்சீரிஸ்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது. 

ஹீரோக்களை தாண்டி தற்போது பல பிரபலங்களும் சினிமா மட்டுமில்லாமல் வெப்சீரிஸ்கள் நடிப்பதிலும் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த முறை ஹாலிவுட்டில் பிரபலமாக இருந்தது. கொரோனா காலத்தில் தான் தமிழ் சினிமா இந்த விஷயத்தை தொடங்கியது. 

ஒரே நேரத்தில் எட்டு எபிசோட் முதல் பத்து எபிசோட் வரை களமிறக்கப்பட்டு விடுவதால் அதிக நேரம் டைம்பாஸாக இருக்கும். அந்த வகையில் பல நடிகைகள் முதல் நடிகர்கள் வரை வெப்சீரிஸ் நடித்து வருகின்றனர். சமீபத்தில் கூட விஜய் சேதுபதியின் கருப்பன் ரிலீஸ் ஆனது. 

அந்த ட்ரிக்கை கண்டுக்கொண்ட ஹாட்ஸ்டார் தனியாக வெப்சீரிஸ் இயக்கி வெளியிட்டு வருகின்றனர். இந்த லிஸ்ட்டில் முதலில் வந்தது ஹார்ட்பீட் தான். முதல் சீசன் வெற்றியை தொடர்ந்து இரண்டாவது சீசன் மிகப்பெரிய ஹிட் கொடுத்தது. 

அந்த வகையில் பல வெப்சீரிஸ்கள் தொடர்ச்சியாக 100 எபிசோட் வரை ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இதுவரை வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமை மட்டுமே வெப்சீரிஸ்கள் வெளியாகி வந்தது. ஒவ்வொரு நாளும் நாளு எபிசோட்கள் ஒளிபரப்பாகும். 

தற்போது வியாழக்கிழமை எல்பிடபுள்யூ என்ற சீரிஸ் 88 எபிசோட் வரை ஒளிபரப்பாகி வருகிறது. புதுமுகங்கள் நடித்துள்ள இந்த சீரிஸில் விக்ராந்த் முக்கிய கேரக்டரில் நடித்து இருக்கிறார். வெள்ளிகிழமை ரெசார்ட் சமீபத்தில் தொடங்கப்பட்டு ஒளிபரப்பாகி வருகிறது. 

அந்தவகையில் இந்த முறை புதிதாக புதன்கிழமையும் பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ் சீரிஸ் வந்துள்ளது. போஸ் வெங்கட், காயத்ரி நடிப்பில் உருவாகி இருக்கும் இது இதற்கு முன் வந்த உப்பு புளி காரம் சீரிஸின் இரண்டாம் பாகமாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. இனிமேல் ஹாட்ஸ்டார் ரசிகர்களுக்கு மூன்று நாளும் ஜாலிதான்!

From Around the web