×

அனிதாவா...? அவ இப்படி தான் - உண்மையை போட்டு உடைத்த செய்தி வாசிப்பாளர்!

அனிதாவை குறித்து உடன் பணியாற்றிய செய்தி வாசிப்பாளர் பதிவு

 

சன் டிவியில் செய்தி தொகுப்பாளராக பிரபலமடைந்தவர் அனிதா சம்பத். இவரது தமிழ் உச்சரிப்பிற்கும், செய்தி வாசிப்பிற்கும் தனி ரசிகர் கூட்டம் உள்ளது. மேலும் இவர் சூர்யாவின் மாற்றான் படத்தில் ஒரு காட்சியில் தோன்றி நடித்தார். இதுமட்டுமின்றி தனது யூடியூப் வீடியோக்களாலும் இவர் ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

கதாநாயகி ரேஞ்சிற்கு மிகவும் குறுகிய காலத்தில் பிரபலமான அனிதா சம்பத்திற்கு பிக்பாஸ் வாய்ப்பு கிடைத்துள்ளது. வீட்டில் ஆரம்பத்தில் சண்டை, சர்ச்சரவு , அழுகை என தொடர்ந்து ப்ரோமோக்களில் இடம் பெற்று மக்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். இந்நிலையில் அனிதாவை குறித்து பாலிமர் தொலைக்காட்சியின் பிரபல செய்தி வாசிப்பாளரான ரஞ்சித் தனது முகநூல் பக்கத்தில்,

"இன்னைக்கு அனிதா சொன்னது அத்தனையும் எனக்கு தெரிஞ்ச உண்மை... அவர் முதன் முதலில் செய்தி வாசிக்க கத்துக்கிட்டது பாலிமரில. நாங்க அப்போ அடிக்காத லூட்டியே இல்ல. மேக் அப் ரூம தாண்டி சிரிப்பு சத்தம் வெளிய கேட்டு நெறைய பேரு ஓடி வந்து பாப்பாங்க. அப்போ அவ பட்ட கஷ்டத்த என் கிட்ட நெறைய தடவ சொல்லி இருக்குறா. எவ்வளவுக்கு எவ்வளவு ஜாலியா இருக்காளோ அவ்வளவு ஷார்ட் டெம்பர்.என பதிவிட்டுள்ளார்.


From around the web

Trending Videos

Tamilnadu News