Categories: Cinema News latest news

சிவாஜி-எம்ஜிஆர், ரஜினி-கமல்,விஜய்-அஜித் இவர்கள் வரிசையில் இணையும் அடுத்த கூட்டணி!..

தமிழ் சினிமாவில் காலங்காலமாக முன்னனி நட்சத்திரங்களுக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகின்றது. அவர்களுக்குள்ள எந்த பிரச்சினைகள் இல்லாவிட்டாலும் அவர்களை சார்ந்த ரசிகர்களால் அந்த போட்டி வலுப்பெறுகின்றது. என் தலைவன் பெருசா? உன் தலைவன் பெருசா? என்ற விவாதங்கள் முன்வைக்கப்படுவதில் இருந்து அது அப்படியே தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டு வருகின்றது.

mgr sivaji

அந்தக் காலத்தில் பி.யு,சின்னப்பா, பாகவதர், என்.எஸ்.கே இவர்கள் இருந்தாலும் இந்த போட்டிகள் எம்ஜிஆர் சிவாஜி சினிமாவில் ஆதிக்கம் செலுத்திய பிறகே தோன்றியது. ஒரு பக்கம் எம்ஜிஆர் ரசிகர்கள், ஒரு பக்கம் சிவாஜி ரசிகர்கள் என சண்டையிட்டு கொண்டிருந்தனர். இருவரின் படங்கள் ஒன்றாக ரிலீஸ் ஆவதில் இருந்து எம்ஜிஆர் சிவாஜி இவர்களுக்கிடையே வேறு யாரையும் உள்ளே நுழையவும் அனுமதிக்கவில்லை.

rajini kamal

அவர்களை தொடர்ந்து அதே வரிசையில் வந்து நின்றவர்கள் ரஜினி கமல். ரஜினியை விட கமல் சினிமாவில் சீனியர் ஆனாலும் சினிமாவில் நடித்த சில ஆண்டுகளிலேயே தன்னுடைய கொடியை நிலையாக நாட்டினார் ரஜினி. உலகமே ரஜினியை கொண்டாட ஆரம்பித்தனர். அதன் பிறகே ரஜினிக்கும் கமலுக்கும் இடையே தொழில் ரீதியாக போட்டிகள் உருவானது.

vijay ajith

அந்த தலைமுறையை அடுத்து கிட்டத்தட்ட 90 களில் இருந்து தங்களது பில்லர்களை உறுதியாக ஊன்றியவர்கள் விஜய் மற்றும் அஜித்.இருவரும் ஒரே காலத்தில் சினிமாவில் அறிமுகமாகி ஒன்றாக வெற்றி தோல்விகளை சந்தித்து திரைத்துறையில் ஒரு முக்கியமான அந்தஸ்தில் இருந்து வருகின்றனர். மேலே சொன்னவர்களை விட விஜய் அஜித் ரசிகர்கள் செய்யும் அட்டகாசம் அத்துமீறி போய்க் கொண்டிருக்கின்றது.

sivakarthikeyan karthi

இந்த நிலையில் இவர்களுடனே சக போட்டியாளர்களாக சூர்யா, விக்ரம், தனுஷ், சிம்பு, கார்த்தி, என பல முன்னனி நடிகர்கள் இருந்தாலும் அந்த ஜோடி வரிசையை விஜய் அஜித்திற்கு பிறகு யார் தொடுவார்கள் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் சரியான ஜோடி என்று சிவகார்த்திகேயன் மற்றும் கார்த்தியை ரசிகர்கள் ட்விட் செய்து வருகின்றனர்.

இதையும் படிங்க : எஸ்.ஏ.சி-க்கும் விஜய்க்கும் நடந்த பயங்கர சண்டை!.. பேட்டியில் போட்டு உடைத்த ஷங்கர்…

அதை உண்மையாக்கும் வகையில் இருவரின் நடிப்பில் வெளிவந்த பிரின்ஸ் மற்றும் சர்தார் போன்ற படங்கள் கடந்த வருடம் ஒன்றாக ஒரே நேரத்தில் ரிலீஸ் ஆகி விமர்சனங்களை சந்தித்தன. அதே போல் சிவகார்த்திகேயன் நடிப்பில் தயாராகும் ‘மாவீரன்’ படமும் கார்த்தியின் நடிப்பில் தயாராகும் ‘ஜப்பான்’ படமும் மீண்டும் ஒரே நேரத்தில்
மோதவிருக்கின்றன. அதாவது ஜூன் 29 ஆம் தேதி திரைக்கு வருவதாக செய்திகள் வெளியாகின்றது. இதை பார்த்த ரசிகர்கள் விஜய் அஜித்திற்கு அடுத்த சரியான ஜோடி இவர்கள் தான் என டிரெண்ட் செய்து வருகின்றனர்.

Published by
Rohini