இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் கடந்த 2014-ஆம் ஆண்டு சூர்யா நடிப்பில் வெளியான திரைப்படம் “அஞ்சான்”. இந்த திரைப்படத்திற்கு ரசிகர்களுக்கு மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் படம் அதை பூர்த்தி செய்யவில்லை என்றே கூறலாம்.
இந்த படத்தின் தோல்வியை தொடர்ந்து, சூர்யா லிங்குசாமியிடம் அடுத்த படத்தின் கதையை கூட கேட்கவில்லை. லிங்குசாமியும் 4 ஆண்டுகளுக்கு பிறகு தான் சண்டைக்கோழி படத்தை இயக்கினார். இந்த படமும் ரசிகர்களுக்கு மத்தியில் ஒரு கலவையான விமர்சனத்தை பெற்று, வசூல் ரீதியாக தோல்வியை தழுவியது.
இதனால் தமிழில் இருந்தால் செட் ஆகாது என நேரடியாக தெலுங்கு பக்கம் தஞ்சம் அடைந்துவிட்டார். தெலுங்கில் இவர் தற்போது ராம் போதினேனியை வைத்து “தி வாரியர்” என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் நன்றாக வந்துள்ளதாகவும், செய்திகள் வந்தது. படம் வரும் ஜூலை 14-ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இதையும் படியுங்களேன்- விஜய் என் படத்திற்கு வேண்டாம்.! தளபதியின் மெகா ஹிட் இயக்குனர் அதிரடி கருத்து.! வருத்தத்தில் ரசிகர்கள்.
இந்த நிலையில், இயக்குனர் லிங்குசாமி சூர்யாவிடம் நாம் இருவரும் இணைந்து ஒரு படம் பண்ணாலாம் என கேட்டுள்ளாராம். படத்தின் கதைக்கான ஒரு வரியையும் லிங்குசாமி கூறிவிட்டாராம். அதற்கு சூர்யா சம்மதம் தெரிவித்துவிட்டு நாம பண்ணலாம் எனவும் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மீண்டும், சூர்யா லிங்குசாமிக்கு வாய்ப்பு கொடுத்துள்ளதால், அஞ்சான் படத்தை மறக்கும் விதமாக தான் கத்துகிட்ட வித்தையை களமிறக்கி ஒரு சூப்பரான படத்தை கொடுப்பார் என நெட்டிசன்கள் தெரிவித்து வருகிறார்கள்.
TVK Vijay:…
TVK Vijay:…
Karur: தவெக…
STR49: சினிமாத்துறை…
Vijay TVK:…