×

அடுத்தடுத்து இன்ப அதிர்ச்சி.... ‘வாடிவாசல்’ அட்டகாசமான ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்!

இன்று நடிகர் சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு படக்குழுவினர் அடுத்தடுத்து அப்டேட் கொடுத்து ரசிகர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகின்றனர். சூரரைப் போற்று படத்தின் "காட்டு பயலே" பாடல் வீடியோ வெளியாகி ரசிகர்களை ரொமான்டிக் மூடில் கொண்டு சென்றது.

 

அதை தொடர்ந்து தற்ப்போது வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கவிருக்கும் வாடிவாசல் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிட்டுள்ளனர். எதிர்பார்க்காத இந்த இன்ப அதிர்ச்சியை கண்டு சூர்யாவின் ரசிகர்கள் அனைவரும் கொண்டாட்டத்தில் உள்ளனர்.

பர்ஸ்ட் லுக் போஸ்டரை படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு தனது ட்விட்டரில் வெளியிட்டு
இன்று உங்கள் பிறந்த நாள்...என்றும் அது சிறந்த நாள்... என கேப்ஷன் கொடுத்து,  

தம்பி.. இன்று உங்கள் பிறந்தநாள்...
என்றும் அது சிறந்த நாள்..
இனிய இந்நன்னாளில்
எல்லா வளமும்
நலமும் பெற்று
தேக பலம்
பாத பலம்
ஆயுள் பலம் பெற்று
வாழிய பல்லாண்டு என்று வாழ்த்தியுள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News