தெலுங்கில் கவர்ச்சி காட்டி ரசிகர்களை கவர்ந்தவர் நித்தி அகர்வால். 2017ம் ஆண்டு இவர் நடித்த முதல் திரைப்படம் முன்னா மைக்கேல் வெளியானது. சில அழகிப்போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளார்.தமிழில் ஜெயம் ரவி நடித்த பூமி படம் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமானார்.
மேலும், சுசீந்திரன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடித்த ஈஸ்வரன் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தார். அதையடுத்து தற்போது பவன் கல்யாணுக்கு ஜோடியாக ஹரி ஹரா வீர மல்லு என்கிற தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் அடுத்த வருடம் வெளியாகிறது.
இவருக்கு தமிழ் ரசிகர்கள் கோவில் கட்டும் அளவுக்கு சென்ற கூத்தும் நடந்தது. எனக்கு கோவில் எல்லாம் கட்டா வேண்டாம். அன்பு காட்டினால் மட்டுமே போதுமானது என அவர் இன்ஸ்டாகிராமில் கோரிக்கை வைத்த கதையும் நடந்தது. ஒருபக்கம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை சூடேற்றி வருகிறார்.
இந்நிலையில், வெள்ளை நிற புடவை அணிந்து அழகாக போஸ் கொடுத்து நடத்தப்பட்ட போட்டோஷூட் தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
Cook with…
சர்ச்சை நாயகன்…
Ajith Vijay:…
OTT-யில் புதிய…
சிம்புவுடன் இணைந்த…