7 இயர்ஸ் ஆஃப் செலபிரேஷன்.... முக்கியமான நாளை கொண்டாடிய நிக்கி கல்ராணி!

டார்லிங் படம் மூலம் அறிமுகம் ஆனவர் நிக்கி கல்ராணி. தொடர்ந்து வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன்,கி மொட்ட சிவா கேட்ட சிவா , கலகலப்பு 2 , சார்லி சாப்ளின் 2 , மரகத நாணயம் உள்ளிட்ட படங்களில் நடித்து தமிழ் சினிமாவின் தனக்கான இடத்தை தக்க வைத்துக்கொண்டார்.
இவர் யாகாவாராயினும் நாகாக்க மற்றும் மரகத நாணயம் உள்ளிட்ட படங்களில் தனக்கு ஜோடியாக நடித்த நடிகர் ஆதியுடன் காதல் கிசுகிசுக்கப்பட்டார். நிக்கி கல்ராணி ஆதியின் தந்தை பிறந்தநாளில் அவரது குடும்பத்தாருடன் சேர்ந்து கொண்டாடிய புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாக இருவரும் விரைவில் திருமணம் செய்துக்கொள்ளவிருப்பதாக கூறி கதை கட்டிவிட்டனர்.
அதற்கு எந்த வித ரியாக்ஷனும் கொடுக்காமல் தான் உண்டு தன் வேலை உண்டு என கூலாக இருந்து வரும் நிக்கி கல்ராணி தற்போது தான் நடிக்க வந்து 7 வருடங்கள் ஆனதை நினைவு கூர்ந்துள்ளார். அது குறித்து தனது இன்ஸ்டாகிராமில், பல கதா பாத்திரங்கள், ஏற்பாடுகள், உணர்ச்சிகள், சிரிப்பு, நாடகம் மற்றும் இன்னும் பல!
இந்த தொழிலில் அற்புதமான 7 ஆண்டுகள் கடந்துள்ளேன். உங்கள் ஒவ்வொருவருக்கும் நான் கடமைப்பட்டிருக்கிறேன்.
உங்கள் நிலையான அன்பும் ஆதரவும் இல்லாமல் நான் இங்கே இருக்க மாட்டேன். நீங்கள் எனக்குக் கொடுத்த அன்பின் மிகுதியால் நான் அதிகமாக இருக்கிறேன். இன்று நான் யார் என்று என்னை ஆக்கியதற்கு நன்றி. அது உண்மையிலேயே உங்களுடையது. என தனது நன்றியை பதிவு செய்துள்ளார்.