×

ஆதி வீட்டு விசேஷத்தில் நிக்கி கல்ராணி - தீயாய் பரவும் புகைப்படம் இதோ!

நடிகர் ஆதி மிருகம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார். தொடர்ந்து ஈரம், அரவான், ஆடுபுலி, அய்யனார் , மரகத நாணயம் உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நடித்து புகழ்பெறுள்ளார். தமிழ் படங்கள் மட்டுமின்றி தெலுங்கு சினிமாக்களிலும் கவனம் பெற்றுள்ளார்.

 

இந்நிலையில் நடிகர் ஆதி நடிகை நிக்கி கல்யாணியை காதலித்து வ்ருவதாக தகவல்கள் கசிந்துள்ளது. நிக்கி கல்ராணி தமிழில் வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், கோ 2 , சார்லி சாப்ளின் 2 உள்ளிட்ட படங்ககளில் நடித்துள்ளார். இவர் நடிகர் ஆதியுடன் சேர்ந்து  மலுபு என்ற தெலுங்கு படத்தில் முதன்முறையாக நடித்தார். அப்போது இருவருக்குள்ளும் நல்ல நட்பு உருவானது.

அதையடுத்து தமிழில் மரகத நாணயம் என்ற ஹிட் அடித்த தமிழ் படத்தில் சேர்ந்து நடித்திருந்தனர். அப்போது தான் இருவருக்குள்ளும் காதல் மலர்ந்து காதலித்து வருவதாகவும் விரைவில் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொள்ள இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனை உறுதி படுத்தும் விதத்தில் நடிகர் ஆதியின் தந்தை ரவிராஜாவின் பிறந்தநாளை கடந்த 14-ம் தேதி குடுபத்தினர் மட்டும் கொண்டாடியுள்ளனர்.

இந்த கொண்டாடட்டத்தில் குடும்பத்தினர் தவிர நடிகை நிக்கி கல்ராணி மட்டும் கலந்துகொண்டுள்ளார். கொரோனா அச்சுறுத்தலால் வேறு யாரையும் அழைக்காத ஆதி இந்த புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதன் மூலம் இவர்களது காதல் வெளிச்சத்திற்கு வந்துள்ளதாக கோலிவுட் , டோலிவுட் வட்டாரங்கள் கிசு கிசுகிறது. ஆனால், இது குறித்து அவர்கள் இருவரும் தற்ப்போது வரை மவுனம் காத்து வருவது குறிப்பிடத்தக்கது.

From around the web

Trending Videos

Tamilnadu News