ஈரம், மிருகம் உள்ளிட்ட சில தமிழ் படங்களில் நடித்தவர் நடிகர் ஆதி. அதேபோல், டார்லிங் படத்தில் அறிமுகமாகி தமிழில் பல திரைப்படங்களில் நடித்தவர் நிக்கி கல்ராணி.
நிக்கியும், ஆதியும் மரகத நாணயம் உள்ளிட்ட சில படங்களில் இணைந்து நடித்தனர். அப்போது அவர்களுக்குள் காதல் உருவானது. அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டிருப்பதாக சமீபத்தில் செய்திகள் வெளியானது.
தற்போது அவர்களின் திருமணம் நடந்து முடிந்துள்ளது. நேற்று இவர்களுக்கு மெஹந்தி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், ஆலுமா டோலுமா பாடலுக்கு இருவரும் நடனமாடும் வீடியோவும் வெளியானது.
இந்நிலையில், இன்று காலை அவர்களின் திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது. இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
ரஜினி கமல்…
Rajasaab: ஏற்கனவே…
Kantara Chapter…
str 49…
நடிகர் தனுஷ்…